பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கரிகாலன் - 287 பாராட்ட முடிந்தது; அவ்வாறு பாராட்டுங்கால், அச்செயல்களோடு தொடர்புடையவன், திருமாவளவன், கரிகாலன் என அவன் இயற்பெயரையே கூறவும் முடிந்தது. கரிகால் வளவனை, இத்துணைத் தெளிவாக உணர்ந் திருந்த இளங்கோவடிகளார், மாதவி அரங்கேறியது கரிகாலன் அரசவையில், மாதவிக்குத் தலைக்கோல் அளித்து ஆயிரத்தெண் கழஞ்சு பொன் பரிசு அளித்து விழுச் சிறப்புச் செய்தது கரிகாலன் என்பன உண்மையாயின், அவ்விடங் களில் முறையே "திருமாவளவனுக்கு அல்லது கரிகாலனுக்குக் காட்டல் வேண்டி என்றும், "கரிகால்வளவன் பால் தலைக்கோல் எய்தி" என்றும், கரிகாலனால் விழுச்சீர் எய்திய மாதவி" என்றும், கரிகாலன் பெயர் கூறியே பாடியிருப்பர். "சூழ்கழல் மன்னர்க்குக் காட்டல் வேண்டி" (அரங்கேற்று காதை : 1)" என்றும், "காவல் வேந்தன்", "தலைக்கோல் எய்தி" (ஷெ :158 - 161) என்றும், "வேந்துறு சிறப்பின் விழுச்சீர் எய்திய மாந்தளிர் மேனி மாதவி" (அடைக்கலக் காதை : 21 - 22) என்றும் வேறு வேறு தொடர் வாய்பாட்டால் கூறியிருக்க மாட்டார். ஆகவே, மாதவி அரங்கேறிப் பரிசு பெற்றது கரிகாலன் அவையில் அன்று; அக்காலை அரசாண்டிருந்த வேறு ஒரு சோழன் அவையில் தான், ஆகவே, அத்தொடர்களில் வரும் "சூழ் கழல் மன்னன்", "காவல் வேந்தன்", "வேந்து" என்ற சொற்களுக்குக் "கரிகாலன்" என உரையாசிரியர்கள் பொருள் கொண்டது பொருந்தாது. x - தம்மைக் காணும் ஆடவர் உயிரைக் கவர்ந்து கொள்ளும் பேரழகு வாய்ந்தவர் புகார் நகரத்துப் பெண்டிர் என்ற அம் மாநகரத்து மகளிர் நலம் பாட வந்த இளங்கோவடிகளார், மக்கள் உயிரைக் கவரும் தன் தொழிலைப் புகார் நகரத்தே ஆற்ற முடியாது அப்புகார் நகரத்து மன்னனுக்கு அஞ்சிய கூற்றுவன், தன் ஆண் உருவைக் கைவிட்டுப் பெண் உருக்கொண்டு உலாவருகிறான் போலும் "மன்னவன் செங்கோல் மறுத்தல் அஞ்சிப் பல்லுயிர் பருகும் பகுவாய் கூற்றில் ஆண்மையில் திரிந்து...பெண்மையில் திரியும்".