பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

288 - - தமிழர் வரலாறு (இந்திர விழவூர் எடுத்த காதை 218 - 223 என்ற பகுதி, எவ்வாறு புகார் நகரத்துப் பெருமையைப் பொதுவாகப் பாராட்ட வந்ததோ அது போன்றதே, சோழப் பெருநாட்டை ஆளும் அரசனுக்கு, வளங்கொழிக்கும் பெருநகரமாம் புகார் நகரின் வளப் பெருக்கத்தை உணர்த்த திருமகளே அந்நகருள் புகுந்து விட்டாள் என்ற பொருள்பட வரும் "இருநில மன்னர்க்குப் பெருவளம் காட்டத் திருமகள் புகுந்தது இச் செழும்பதி" (இந்திரவிழவூர் எடுத்த காதை : 212.213) என்ற வரிகளும் ஆதலின், அத்தொடரில் இடம் பெற்றிருக்கும் "மன்னன்" என்ற சொல்லுக்கு அடியார்க்கு நல்லார் "கரிகாலன்" எனப் பொருள் கொண்டதும் பொருந்தாது . புலிக்கொடி பறக்கும் தேர் ஊர்ந்து செல்லும் உரிமை, சோழர் குலத்தவர் அனைவர்க்கும் உரிய ஒன்று; ஆகவே நாடுகான் காதையில் வரும் "உழைப்புலி கொடித்தேர் உரவோன்" என்ற தொடரில் வரும் அத்தொடருக்கு அடியார்க்கு நல்லார், கரிகாலன் எனப் பொருள் கொண்டதும் பொருந்தாது. - ஆக, மேலே கூறிய விளக்கங்களால், திருமாவளவன், கரிகாலன் என்ற அவன் இயற்பெயர் விளங்கவே கூறப்பட்ட, அவன் வடநாட்டுப் படையெடுப்பு, அவன் கடல் விளையாட்டு, அவன் மகள் ஆதிமந்தி வரலாறு ஆகிய அம்மூவிடம் தவிர்த்துச் சிலப்பதிகார நிகழ்ச்சிகளோடு தொடர்புபடுத்தி வழங்கியிருக்கும், சோழர் குலத்தவரைக் குறிக்கும் சென்னி, செம்பியன் போலும் பெயர்கள் கரிகாலனைக் குறிப்பதாக, உரையாசிரியர் பொருள் கொண்டது தவறு. அப்பெயர்களால் குறிப்பிடப்படுவோன் கரிகாலன் அல்லன். அவன் சிலப்பதிகாரக் காலத்துக்கு முந்தியவனே அல்லது சிலப்பதிகாரக் காலத்தவன் அல்லன் என்பன தெளிவாகின்றன. மேலும், சிலப்பதிகாரத்து நிகழ்ச்சிகளில், சோழநாட்டில் நிகழ்ந்தன கூறும் புகார்க் காண்டத்து இறுதியில் வரும் கட்டுரையின் தொடக்கத்திலும், பாண்டிய நாட்டில்