பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

292 . - - - - - - - - - - - - - - - - - - - தமிழர் வரலாறு கயவாகு வஞ்சிக்கு வந்திருந்தான். விழாவில் பங்கு கொண்டான். தன்னாட்டில் தான் எடுக்கும் விழாவிற்கு வருகை தரவேண்டிக் கண்ணகி தெய்வத்தின் ஒப்புதல் பெற்றான் என்பதெல்லாம் உண்மை. ஆனால், அவன் நாடு திரும்பியதுமே, விழா எடுத்தான் அல்லன். தன் இலங்கை நாட்டில், மழைவளம் குறைந்து வறட்சி மிகுந்து விட்டதாக, அது தீர்க்க எண்ணியிருந்தபோது, அதுபோல் வறட்சிக்கு ஆளான தென்பாண்டிநாடும், கொங்குநாடும் முறையே, வெற்றிவேற்செழியனும், கோசரும், கண்ணகிக்கு விழா எடுக்க மழைவளம் பெற்ற செய்தியும் கிட்டவே, கண்ணகிக்கு விழா எடுத்தான். . உரைபெறுகட்டுரையில், கொற்கைச் செழியன் விழா எடுக்க மழை பெய்து வளம் கொழித்த செய்தியைப் பாண்டிய நாடு போலவே, மழை வறண்டு போன கொங்கு நாட்டுக்கோசர் அறிந்து, தங்கள் நாட்டிலும் கண்ணகிக்கு விழா எடுக்க மழைவளம் மிக்கது. அச்செய்தி கயவாகு காதுகட்கும் எட்டவே, தன்னாட்டு அரந்தை போக்க, அவனும், அவன் நாட்டகத்தே விழா எடுத்தான். ஆக, உரைபெறுகட்டுரையில், "அது கேட்டு", எனவரும் தொடர்களில் இடம்பெற்றிருக்கும் 'அது' என்ற கட்டு, விழா எடுக்க மழை பெய்த செய்தியைக் குறிப்பதாகக் கொண்டால், உரைபெறுகட்டுரையில் கூறப்பட்டிருக்கும் செய்திக்கும், வரந்தரு காதையில் கூறப்பட்டிருக்கும் செய்திக்கும் இடையில் எவ்வித முரண்பாடும் இல்லையாதல் உறுதியாம். செங்குட்டுவன் காலத்தை, அவன் கஜபாகுவின் சம காலத்தவன் என்பது கொண்டு முடிவுசெய்தல் இயலாது, என்பதற்குத் திருவாளர் அய்யங்கார் காட்டும் பிறிதொரு காரணம் பின்வருமாறு : இலங்கை வரலாற்று நூலாகிய அம்மகாவம்சம், கஜபாகுவை, வெறிபிடித்த பெளத்த சமயத்த வனாகவே காட்டுகிறது. பெளத்தப் பள்ளிகளைக் கட்டும் அவன் செயல்களை விளக்கிக் கூறும், அந்நூல், பத்தினி வழிபாட்டு நெறியினை இந்தியாவிலிருந்து கொண்டுவந்தது பற்றிய குறிப்பு எதையும் கூறவில்லை" என்பது.