பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

306 தமிழர் வரலாறு அடையா வாயில், மிளைசூழ் படப்பை, நீல்நிற உருவின் நெடியோன் கொப்பூழ், நான்முக guರ್ಿ பயந்த, பல்லிதழ்த் தாமரைப் பொகுட்டின் காண்வரத் தோன்றிச் சுடுமண் ஓங்கிய நெடுநகர் வரைப்பின், இழும் என் புள்ளின் ஈண்டுகிளைத் தொழுதிக் கொழுமென் சினைய கோலி யுள்ளும், பழம் மீக்கூறும் பலாஅப் போலப், புலவுக் கடவுள் உடுத்த, வானம் சூடிய மலர்தலை உலகத் துள்ளும், பலர்தொழ விழவுமேம் பட்ட பழவிறல் முதுர், அவ்வாய் வளர்பிறை குடிச் செவ்வாய் அந்தி, வானத்து ஆடுமழை கடுப்ப, வெண்கோட்டு இரும்பிணம் குருதி ஈர்ப்ப, ஈரைம் பதின்மரும், பொருது களத்து அவியப், பேரமர்க் கடந்த கொடிஞ்சி நெடுந்தேர் ஆராச் செருவின் ஐவர் போல, அடங்காத் தானையொடு உடன்றுமேல் வந்த ஒண்ணாத் தெவ்வர் உலைவிடத்து ஆர்த்துக் கச்சி யோனே, கைவண் தோன்றல்' - பெரும்பாண் : 393 - 420. மேலே எடுத்துக்காட்டிய பகுதியில், காஞ்சியில், பல்வேறு மக்களும், விழாவெடுத்து வழிபாடு செய்வர் எனக் குறிப்பிடப்பட்டிருப்பதன் பொருள், இரண்டு நூற்றாண்டுகள் கழித்து யுவான்சாங், அந்நகருக்கு வருகை தந்தபோது இருந்ததுபோலவே, வட இந்திய ஆகமநெறி வழிபாட்டுச் சமயங்களின், அதாவது வைஷ்ணவ, சைவ, சமண, புத்த சமயங்களின் வாதிகள், ஆங்கு வாழ்ந்திருந்தனர் என்பது ஈண்டுக் குறிப்பிடப்படல் வேண்டும். பாரதப் போர் பற்றிய