பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

308 - தமிழர் வரலாறு "இமையவர் உறையும் சிமையச் செவ்வரை வெண்திரை கிழித்த விளங்குசுடர் நெடுங்கோட்டுப் பொன் கொழித்து இழிதரும், போக்கரும் கங்கை, பெருநீர் போகும் இரியல் மாக்கள், ! ஒருமரப் பாணியில் தூங்கியாங்குத் தொய்யா வெறுக்கையோடு துவன்றுபு குழிஇ". - பெரும்பாண் : 429 - 434. தன்னைச் சூழ்ந்து நின்று துணங்கைக் கூத்து ஆடப் படுவோளாகிய பெண்தெய்வம், இப்பாட்டில், வெண்திரை வீசும் கடல் பரப்பில் சென்று, கொடிய சூரனைக் கொன்ற, அழகிய புதிய அணிகளை அணிந்து, சேயோனாம் முருகனைப் பெற்ற ஆரியத் தாய்க் கடவுளாக மாற்றப்பட்டாள். "வெண்திரைப் பரப்பின் கடுஞ்சூர் கொன்ற பைம்பூண் சேஎய் பயந்த மாமோட்டுத் துணங்கையம் செல்வி' - பெரும்பாண் : 457 - 459, உலகம், நாவல் என்ற கனியால் பெயர் பெற்ற, அழகிய குளிர்ந்த சோலையாக, அதாவது ஜம்புத்தீபமாகக் கூறப்பட்டுளது. ("நாவலந்தண் பொழில்", பெரும்பாண் : 465) குதிரை இலக்கணம் பற்றிய குறிப்பும் அதில் உளது. ("நூலோர் புகழ்ந்த புரவி' - பெரும்பாண் : 487), இறுதியாக, வெண்கோடுடைய வாய களிறுகள், கொண்டு வந்து கொடுக்கும், விறகு கொண்டு, முனிவர்கள் வேள்வி வேட்பதும் கூறப்பட்டுளது. "செந்திப் பேணிய முனிவர், வெண்கோட்டுக் களிறுதரு விறகின் வேட்கும்.” -பெரும்பாண் : 408 - 409 ஆரியக் கருத்துகள் மட்டுமல்லாமல், சமஸ்கிருதச் சொற்களும், பழைய தொகைப் பாக்களில் காணப்படு