பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

310, - தமிழர் வரலாறு "கடிமதில் எறிந்து குடுமி கொள்ளும் வென்றியல்லது வினை உடம்படினும் ஒன்றல் செல்லா", . - பெரும்பாண் : 450 - 453, ஆகவே, இளந்திரையன், காஞ்சி நாட்டை ஆண்டு கொண்டிருந்த காலம், எவ்வித வரலாற்று முக்கியத்துவமும் வாய்ந்ததாக அமையவில்லை. ஆனால், கரிகாலன் புகழைப் பாடிய புலவராலேயே, இளந்திரையனும் புகழப்பட்டுள்ளான். ஆகவே, கரிகாலனோடு, இளந்திரையனுக்கு உள்ள உறவு, ஆய்வுக்குரிய முக்கியப் பொருளாகிறது. இளந்திரையன் காஞ்சி அரியணையைக் கரிகாலன் பிள்ளைப் பருவத்தில் கைப்பற்றிக் கொண்டதாகத், திரு. கனகசபை அவர்கள், கருதுகிறார். ஆனால், அதற்கான அடிப்படை அகச்சான்று சிறிது கூட இல்லையாகவே, அது, ஆய்வுக்குத் தகுதியற்றது. அது, ஒரு தவறான கற்பனையல்லது, வேறு அன்று. இளந்திரையன், கரிகாலன் காலத்தவனாதலின், கரிகாலன், காஞ்சி நாட்டை வென்று கைக்கொண்டதும், இளந்திரையன் காஞ்சிக் காவலனாக நியமிக்கப்பட்டுக், கரிகாலனுக்குப் பின்னரும், அதே நிலையில் தொடர்ந்து இருந்தவனாக வேண்டும். - தெலுங்கு நாட்டுச் சோடக் கல்வெட்டுக்கள், கரிகாலனுக்குத் தொண்டைமான் என்ற பெயரன் ஒருவன் g)(559,357.63 G. sp;5|airpor. [No. 123 and 205 of 1899 Referred to in Madras Epic. Reports 1900 - 17, QC, Lil’ Luffle.<r, கரிகாலன் மக்களில், சேர நாடாண்ட மக்களைப்பற்றிப், பொதுவாக அக்கறைகாட்டுவதில்லை அக்காலகட்டத்தில், தெரிந்த தொண்டைமான், இளந்திரையன் ஒருவனே ஆதலின், கல்வெட்டுக் கூறும், அத்தொண்டைமான், பெரும்பாலும் இளந்திரையனே ஆகும். பெரும்பாணாற்றுப் படையில், இளந்திரையன், தொண்டையர் வழிவந்தவன் எனக் கூறப்பட்டுள்ளான். ("தொண்டையோர் மருக!"பெரும்பாண் : 454), தொண்டையோர், அல்லது தொண்டையர் என்ற சொல் திரையர் என்ற பெயராலும்