பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

314 தமிழர் வரலாறு السفلكضخ நேர்ந்து, அக்கதையில் விளக்கியுள்ளவாறு, அப்பழைய துறைமுகப் பட்டினத்தைக் கடல் கொள்வதில் கொண்டு போய் விடுவதும் செய்தது. இருகதைகளுமே நம்புதற்கு இயலாதன; அவை இரண்டையும் ஒன்றாக இணைத்துக் காண்பது, அவற்றின் மீது நம்பிக்கையை உண்டாக்கிவிடாது. புறநானூற்றுப் பதிப்பாசிரியர் அல்லது தொகுப்பாசிரியர், 185 ஆம் எண் பாட்டு, தொண்டைமான் இளந்திரையன் பாடியது என்றும். 95 ஆம் எண் பாட்டு, தொண்டைமான் படைக்கலப் பெருமை குறித்துப் பாடுகிறது என்றும் கூறியுள்ளார். "தொண்டைமான்" என்ற சொல், "தொண்டை" என்ற சொல்லும் சமஸ்கிருத விகுதி "மான்' (மத்) என்பதும் இணைத்து, தொண்டைக்கு உரிய தலைவன் எனும் பொருள் உணர்த்தும் ஒரு தொகைச் சொல், "தொண்டையர்" எனும் சொல், தொண்டைக் கொடியை அடையாளச் சின்னமாகக் கொண்ட பழங்குடியினர் எனும் பொருள் உடையது. தொண்டை என்பது, இன்றைய நாட்களில், பொதுவாகக் கோவை என அழைக்கப்படுகிறது. ஆனால், தெலுங்கில், "தொண்டே" என்பது, அச்செடியின், பொதுவான பெயராகும். பிற்காலப் பல்லவர்கள், அதாவது, காஞ்சியைக் கி. பி. 550க்கு முன்னரே மீண்டும் கைக்கொண்டு, அந்நாள் முதல் கி.பி. 900 வரை, அதைத் தலைநகராகக் கொண்டு ஆண்டவர்கள், தங்கள், தமிழ்க் குடிமக்களாம் தொண்டையரோடு, பழைய பல்லவர்களினும் நெருக்கமாகக் கலந்துவிட்டனர்; உண்மையில், முழுக்க முழுக்க, தமிழர்களாகவே ஆகிவிட்டனர். அவர்கள், தங்களைக் தொண்டையர் குல அரசன் எனும் ஒரு பொருளே தருவதான, "தொண்டைமான்" (சுந்தரமூர்த்தி நாயனார் வடதிருமுல்லை வாயில் பதிகம் 10), "தொண்டையர்கோன்" (திருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழி : 8 : 10 : 1) "தொண்டை மன்னவன்" (திருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழி : 5 : 8 : 9 : 1) என்றெல்லாம் பெயர் சூட்டிப் பாராட்டும் புலவர்களைப் பேணும் புரவலர்களும் ஆயினர். நாடும், "தொண்டைநாடு அல்லது "தொண்டை மண்டலம்" (துண்டக விஸயம் "துண்டிர விஸ்யம்" எனச் சமஸ்கிருத