பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளந்திரையன் 375 மாக்கப்பட்டது) என அழைக்கப்படவும் ஆயிற்று. ஆனால், இவை அனைத்தும் எட்டாம் நூற்றாண்டில் நடைபெற்றன. இந்நிலையிலும், இன்றைய எழுத்தாளர் சிலர், தொண்டையர் என்ற சொல் பல்லவ என்ற சொல்லின் மொழிபெயர்ப்பு, அல்லது. இதன் மொழிபெயர்ப்பு அது, எனக் கூறி வாதிடுகின்றனர். "பல்லவ” என்பது, இளம்தண்டு, சிறுகம்பு அல்லது இளம்தளிர் எனும் பொருள் உடையதாகத் தொண்டை என்பது, ஒருவகைக் கொடி எனும் பொருளே உடையதாதலின், அவ்விரு சொற்களும், ஒன்றின் பெயர்ப்பு ஒன்று ஆதல் அறவே இயலாத ஒன்று. ஆறாம் நூற்றாண் டிற்குப் பின்னர்ப் பல்லவ அரசர்கள், தமிழில், “போத்தரையர்” என அழைக்கப்பட்டனர். போத்து என்பது இளம் கொம்பு எனும் பொருள் உடையது ஆதலின், போத்தரையர் என்ற சொல், "பல்லவராஜா" என்பதன் மொழிபெயர்ப்பதால் கூடும், ஆகவே, ஒரு தமிழ்ப் பழங்குடியினர் பெயராகிய தொண்டையர் என்ற சொல்லை வட இந்தியாவிலிருத்து வ்ந்து குடியேறிய, ஆசிய மயமாகிவிட்ட ஓர் அரச குலத்தவர் பெயராகிய "பல்லவர்" என்ற சொல்லிலிருந்து கொள்வதும் மாறாக, இச்சொல்லை, அச்சொல்லிலிருந்து கொள்வதும் ஆகிய அனைத்து முடிவுகளும், வாதங்களின் முன் நில்ைத்து நிற்பன ஆகா. இளந்திரையன், ஒரு தமிழர் தலைவன் ஆதலின், அவன் தமிழ்ப் புலவர்களைப் பேணிப் புரத்தான். அவனே, ஒரு தமிழ்ப் புலவனும் ஆவன். அவனுடைய பாடல் ஒன்று புற நானுாற்றில் இடம் பெற்றுளது. அது, ஏனைய குடிமக்கள் பாக்களிலும், சிறந்த செய்யுள் நயம் வாய்ந்தது என்பதற்காக அல்லாமல், காவல பாவலன் பாடிய பாட்டினுக்கு ஒர் எடுத்துக்கள்.ட்டு ஆகுக என்பதால் ஈண்டு மொழி பெயர்க் கப்பட்டுளது. அது இது: "உருளையும் பாரும் நன்கு காக்கப் பெற்று உலகின்கண் ஒட விடப்படும் நாடுகாவலாகிய நல்ல வண்டி, அதனைச் செலுத்துவோன், நாடாளும் மாண்பு நிறையப் பெற்றவனாயின், ஊறுபாடு இல்லாமல், இனிதே நன்கு ஒடும்; அவன், அதனை நன்கு செலுத்த அறியானாயின், அது நாள்தோறும், பகையாகிய பெரும் சேற்றில் சிக்குண்டு மிகப்பெரிய துன்பத்தைத் தந்துவிடும்” ... . . .” 2%