பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

! 316 தமிழர் வரலாறு "கால்பார் கோத்து, ஞாலத்து இயக்கும் காவற் சாகாடு உகைப்போன் மாணின், ஊறு இன்றாகி, ஆறு இனிது படுமே; உய்த்தல் தேற்றான் ஆயின், வைகலும் பகைக்கூழ் அல்லற் பட்டு மிகைப் பஃல் தி நோய் தலைத்தலைத் தருமே". - புறம் : 185. அரசியல் வானில், இவ்வாறு சிறக்கச் சிறகடித்துப் பாடிய இப்பாட்டை அடுத்து, இளந்திரையன், நற்றிணையில் இடம் பெற்றிருக்கும், நெய்தல் திணை சார்ந்த பாடல்கள் இரண்டும், முல்லைத் திணை சார்ந்த பாடல் ஒன்றுமாக, மூன்று பாடல்களைப் பாடியுள்ளான். அவற்றுள் முதலாவது வருமாறு : "ஒருத்தி, காதல் நோய் நிலைகுலையப் பண்ணுதலால், உளம் கலங்கி, உடல்வலியிழந்து போகும் போது, அன்போடு வந்து, அருகில் இருந்து, இன்மொழிகறி, அந்நோயைத் தணிவித்தல் ஆண்மகனுக்கு உரிய சிறந்த கடமையாகும். ஆனால், காம நோயால் நாம் வருந்திக் கிடக்கும்போது நம் காதலன் வந்து அது தீர்த்தான் அல்லன். கைத்தொழில் வல்ல கம்மியன், அழகுறக் கழுவித் துாய்மை செய்யாத முத்து, தன் பேரொளியை மறைத்துக் காட்டுவது போல், நானும், அவனொடு கொண்ட புணர்ச்சியால் பெற்றுவிட்ட என் புதுநல அழகைப் பிறர் கண்டுகொள்ளா வாறு, என் பெண்தன்மையால் மறைத்து, மனத்துயர்மிக்குக் கிடக்கப் புலால் நாறும் கடல்நீர் நெரித்தலால், அதுகாரும் மலராதிருந்த பேரரும்புகளெல்லாம் மலர்ந்து மணக்கும் புன்னை மரங்கள் நிறைந்த கடற்கரைத் தலைவனாகிய நம் காதலன், அவன்பால் அன்புகொண்டு, அவன் மார்பு தந்த நோயால் வருந்தும் என் நிலையினை அறிந்திலனே' என்ன காதலனோ அவன்?" "நோயலைக் கலங்கிய மதனழி பொழுதில் காமம் செப்பல், ஆண் மகற்கு அமையும்: