பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொடக்க காலத்தில் வெளிநாட்டு வாணிகம் 25 Lectures P. P. 136-138). இச்சொல்லில் "எஸ்" என்ற எழுத்து மறையாமல் இடம் பெற்றிருப்பது, சிந்து எனப்படும் அம். மெல்லிய ஆடை, மெஸ்படோமியாவுக்குப் பர்ஷியா வழியாகச் செல்லவில்லை என்பதை உறுதி செய்கிறது. அது, பர்ஷியா வழியாகச் சென்றிருந்தால் "சிந்து" என்ற ஆற்றின் பெயரிலிருந்து வந்த இந்நாட்டின் பெயர் "ஹிந்து" என ஆனது போல, அச்சொல்லின் மொழி முதல் எழுத்தாகிய "எஸ்" பர்ஷிய வழக்காற்றில் "எச்" என ஆகியிருக்கும். ஆகவே, இம் மெல்லிய ஆடை தமிழ்நாட்டுக் கடற்கரையி லிருந்து, பர்ஷியன் கடற்கரைக்குக் கடல் வழியாக, நேரிடையாகச் சென்றது என்றும், மெல்லிய ஆடையைக் குறிக்கும் பாபிலோனியச் சொல்லாகிய "சிந்து" இதுவரை கருதிவந்ததுபோல், ஆற்றின் பெயரிலிருந்து பெறப்பட்டது அன்று : மாறாக, துளு, கன்னட மொழிகளில் ஆடையின் ஒரு துண்டு எனும் பொருளில் இன்றும் வழங்கி வருவதும், கொடி எனும் பொருளில் "சிந்து" என்ற தமிழ்ச் சொல்லால் பிரதிநித்துவம் செய்யப்படுவதுமாகிய பழைய திராவிடச் சொல் "சிந்து" என்பதிலிருந்தே பெறப்பட்டது என்றும் நான் முடிவு செய்கின்றேன். - . . . . . .” எகிப்துடன் பண்டை வாணிகம் : பெரு வாணிகத் தொடர்பு, தமிழ்நாட்டிற்கும், மெஸ்படோமியப் பள்ளத்தாக்கிற்கும் இடையில் மட்டுமே இருந்துவிடவில்லை. தென்னிந்திய வாணிகம், கி. மு. 3000இல், எகிப்து வரையும் பரவியிருந்தது என்பதற்கான சில அகச் சான்றுகளும் உள. திருவாளர் ஸ்காப் அவர்கள், "கிரேக்கர்கள், தங்கள் காட்டுமிராண்டித் தன்மையிலிருந்து விடுபட்டு வெளிப்படுவதற்கு ஆயிரமாயிரம் ஆண்டுகட்கு முன்னரே, எகிப்தும், பழைய இந்திய நாடுகள் பலவும், நிலைபேறுடையவாகிவிட்டன. தங்கள் தங்கள் நாட்டு, விளை பொருள்களையும், செய்பொருள்களையும் கைம்மாற்றிக் கொள்ளும் ஒரு பெரு வணிக முறை, பொருள்களை மாற்றிக்கொள்ளும் மைய இடத்தைப் பர்ஷிய