பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கரிகாலனுக்குப் பிற்பட்ட சோழ அரசர்கள் 323 கடல் கண்டன்ன ஒண்படைத்தானையொடு மலைமாறு மலைக்கும் களிற்றினர் எனாஅ, உருமுரற்றன்ன உட்குவரு முரசமொடு செரு மேம்படுஉம் வென்றியர் எனாஅ, மண்கெழுதானை ஒண்பூண் வேந்தர் வெண்குடைச் செல்வம் வியத்தலோ இலமே! எம்மால் வியக்கப்படுஉ மோரே, - இடுமுள் படப்பை மறிமேய்ந்து ஒழிந்த குறுநறு முஞ்ஞைக் கொழுங்கண் குற்றடகு புன் புலவரசின் சொன்றியொடு பெறு உம் சிறுர் மன்னர் ஆயினும் எமவயின் பாடறிந்தொழுதும் பண்பினாரே, மிகப்பேர் எவ்வம் உறினும், எனைத்தும் உணர்ச்சி இல்லோர் உடைமை உள்ளேம்: நல்லறிவுடையோர் நல்குரவு - . உள்ளுதும்; பெரும்! யாம் உவந்து நனி பெரிதே' - புறம் : 197. இவ்வாறு கடிந்துரைக்கப்பட்ட அரசன், கரிகாலனாவன் எனக் கருதுகிறார் திரு. கனகசபை அவர்கள். அத்தகைய கண்டனத்திற்கு உரியனல்லனாமளவு புலவர்கள்பால் பெருங் கொடையாளனாவன் கரிகாலனாதலின், அது சரியன்று; அவ்வாறு கொள்வதற்குத் திரு. கனகசபை அவர்கள் காட்டும் காரணம், இரு அரசர்களுமே "திருமாவளவன்" என்ற சிறப்புப் பெயரைக் கொண்டிருப்பதே ஆகும். ஆனால், "மாவளவன்" என்பது இயற்பெயரன்று ஆதலின், சோழ அரசன் எவனும் மாவளவன் என அழைக்கப்படல் கூடும். புறநானூறு 45ஆம் எண் செய்யுளில், சோழர் குலத்து உடன் பிறந்தார் இருவர் ஒருவரோடு ஒருவர் போரிட்டுக் கொண்டிருக்கும்போது, மூத்தவன், கோவூர் கிழாரால், இவ்வாறு நயமாகக் கண்டிக்கப்பட்டான். "நலங்கிள்ளி! நீ