பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

324 தமிழர் வரலாறு எதிர்த்துப் போரிட்டுக்கொண்டிருக்கும் உன் தம்பி பனந்தோட்டு மாலை அணிந்திருக்கவில்லை; ஆகவே அவன், உங்கள் குலப் பகைவனாகிய சேரன் அல்லன், கரிய கொம்புகளைக் கொண்ட வேப்பம் மாலையையும் அவன் அணிந்திருக்கவில்லை. ஆகவே, உங்கள் குல மற்றொரு பகைவனாகிய பாண்டியனும் அல்லன் அவன் உன்தலை மாலையும் சோழர்க்குரிய ஆத்தி மாலையாக உளது; உன்னோடு போரிடுவான் தலை மாலையும் ஆத்தியாகவே உளது. ஆகவே, இருவீரும் சோழர் குடியில் வந்தவர்; உங்கள் இருவரில் யார் ஒருவர் தோற்பினும், தோற்பது சோழர் குடியே போரில் இருவரும் வெற்றி பெறுவது என்பது இயலாது. சோழர் குடி தோற்றது என்ற பழிச்சொல் எழ, நீங்கள் நடந்து கொள்வது உங்கள் குடிக்குப் பெருமை சேர்ப்பதாகாது. மேலும், போர்க்கொடி பறக்கும் தேர்ப்படைகளோடு விளங்கும் உம்பகையரசர்கள் எள்ளி நகையாட இடம் வகுப்பதும் ஆகும்; ஆகவே, போரைக் கைவிடுக" "இரும்பனை வெண்தோடு மலைந்தோன் அல்லன்; கருஞ்சினை வேம்பின் தெரியலோன் அல்லன்; நின்ன கண்ணியும் ஆர் மிடைந்தன்று நின்னொடு பொருவோன் கண்ணியும் ஆர் மிடைந்தன்று; ஒருவீர் தோற்பினும், தோற்பதும் உம் குடியே; இருவீர் வேறல் இயற்கையும் அன்றே; அதனால் குடிப் பொருள் அன்று தும் செய்தி, கொடித்தேர் தும் மோரன்ன வேந்தர்க்கு - மெய்ம்மலி உவகை செய்யும் இவ்விகலே". புறம் : 45. இப்பாக்கள், இனிய நயம் வாய்ந்துள்ளனவாயினும், அவை அளிக்கும் செய்தி வறுமையால், அவை, வரலாற்று மூலங்களாகப் பயன்படுவ அல்ல.