பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கரிகாலனுக்குப் பிற்பட்ட சோழ அரசர்கள் 325. இப்பாக்களைப்பாடிய புலவர்கள் பற்றிய ஆராய்ச்சியினை மேற்கொள்ளும், இன்றைய வரலாற்று ஆசிரியர்கள், பெயர்களில் காணப்படும் ஒருமைப்பாடு, அகப்புறச் சான்றுகளால் உறுதி செய்யப்படாது போயினும், தனிமனிதர்களின் ஒருமைப்பாட்டை உறுதி செய்வதாகக் கொள்கின்றனர். அஃது ஒரு பொருளற்ற கற்பனை ஊகமே. நக்கீரர் என்ற பெயரில், தனித்தனி மனிதர் நால்வர் உள்ளனர். ஒருவர், பழைய தொகை நூல்களில் பல பாடல்களையும், பத்துப்பாட்டில், திருமுருகாற்றுப்படை, நெடுநல்வாடை ஆகிய இருபாடல்களையும் பாடியவர் : இரண்டாமவர், நாலடி நாற்பது என்ற யாப்பிலக்கண ஆசிரியர் : மூன்றாமவர், கற்பனைக் கதை மூலம் கூறப்படுபவராகிய அகப்பொருளுக்கு முதலில் உரை கண்டவர் : நான்காமவர் பிற்காலத்தைச் சேர்ந்த சில சைவ சமய வழிபாட்டுப் பாடல்களைப் பாடியவர். ஆனால், தமிழ்ப் பேராசிரியர்கள், இந்நால் வரையும், ஒருவராகவே இணைத்துக் கொள்கின்றனர். இம்முறை, தமிழ்ப்பாக்களின் முறையான வளர்ச்சி குறித்த ஆராய்ச்சிக்குப் பெருந்தடையாக நின்று, தமிழ்ப்புலவர்கள், சமஸ்கிருதப் பாடல்களைக் கற்றறிந்த பின்னரே, தமிழ்ப் பாக்கள் தோன்றின என முடிவு கொண்டு அகச்சான்று, புறச் சான்றுகளை அறவே புறக்கணித்துவிட்டுப், பிற்காலப்பாக் களை, முற்காலப்பாக்களின் முன்னே கொண்டுபோய் வைத்துத் தங்கள் முடிவினை உறுதிசெய்ய முனைவார்க்குத் துணைபுரியவும் செய்கிறது. புறநானூற்றுச் செய்யுட்களின் கீழ்க் கொடுக்கப் பட்டிருக்கும் கொளுக்கள் நம்பிக்கைக்கு உரியன ஆகா : கி.பி. ஐந்தாம், ஆறாம் நூற்றாண்டுகளில், தான்கு தொகை நூல்களும் தொகுக்கப் பெற்றபோது, ஒவ்வொரு பாட்டுக்கும் அதற்குரிய திணை, துறை, பாடிய ஆசிரியர் பெயர் ஆகியன கொடுக்கப்பட்டன. அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை ஆகிய இவ்வகையிலேயே நமக்குக் கிடைத்துள்ளன. ஆனால், இப்போது நமக்குக் கிடைத்திருக்கும் புறநானூற்றுப் பதிப்பு,