பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/336

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கரிகாலனுக்குப் பிற்பட்ட சோழ அரசர்கள் 329 "கிண்கிணி களைந்த கால், ஒண்கழல் தொட்டுக் குடுமி களைந்த துதல் வேம்பின் ஒண்தளிர், நெடுங்கொடி உழிஞைப் பவரொடு மிலைந்து, குறுந்தொடி கழித்த கைச்சாபம் பற்றி, நெடுந்தேர்க் கொடுஞ்சி பொலிய நின்றோன், யார்கொல்? வாழ்க அவன் கண்ணி! தார்பூண்டு தாவி களைந்தன்று மிலனே! பால்விட்டு அயினியும் இன்று அயின்றனனே !! வயின்வயின் உடன்றுமேல் வந்த வம்ப மள்ளரை வியத்தன்றும் இழிந்தன்றும் இலனே அவரை அழுந்தப் பற்றி அகல்விசும்பு ஆர்ப்பெழக் கவிழ்ந்து நிலம் சேர அட்டதை மகிழ்ந்தன்றும் மலிந்தன்றும், அதனினும் இலனே!" - புறம் : 77. கொளுக்களின் ஆசிரியர், இவ்விரு பாடல்களும், ஒரே அரசன் குறித்து, ஒரே புலவரால் பாடப்பட்டன எனக் கூறுகிறார். புலவருக்குத் தெரிந்த தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனும், புலவருக்குத் தெரியாத இளைய வீரனும், வேறு வேறு அல்லர் ஒருவரேயாதல் நம்புதற்கு இயலாதது. இருவரும் பாண்டியர் குலத்தைச் சேர்ந்தவர் என்பது ஒன்றை மட்டுமே நாம் உறுதியாகக் கொள்ளலாம். புறநானூற்று 77 ஆம் எண் பாட்டின் கொளு ஒரு ஊகம் அதிலும் ஒரு தவறான ஊகம் அவ்வளவே. - மற்றொரு பாட்டு, புறநானூறு 74, அரசர்குலத்து வந்தாரின் மானஉணர்வின் மாண்பினைப் புகழ்கிறது, "குழந்தை பிறந்தபோதே இறந்து போயினும், உயிரற்ற வெறும் தசைப் பிண்டமே பிறந்தாலும், ஆள் அல்ல என்று விட்டுவிடாது, அவற்றையும் வாளால் வெட்டிப் புதைப்பதைத் தவறாது செய்வார். சங்கிலியால் பிணிக்கப் பட்ட நாய் போலப் பிணித்துச் சிறைசெய்து, துன்புறுத்தும்