பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/342

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கரிகாலனுக்குப் பிற்பட்ட சோழ அரசர்கள் 335 மேலும், இக்கொளுக்கள் அளிக்கும் சான்று, இன்றைய இத்திறனாய்வாளர்களை, அப்பாக்கள்தாம் தம்மளவில் அளிக்கும் அகச்சான்றுகளுக்கு மாறாகப் பழந்தமிழ் இலக்கியத்தில், அழிந்ததுபோக எஞ்சியிருக்கும், பல்வேறு நூற்றாண்டிற்கு உரியவாக, அல்லது அரை நூற்றாண்டிற்கு உரியவாக, ஒதுக்கச் செய்துவிடுகிறது. இது, தமிழ் இலக்கியம், விரிவாக்க விதிமுறைகளுக்கு மாறாக, முன் வரலாறு ஏதும் இல்லாமலே, ஒரு காலகட்டத்தில், திடுமெனப் பேரொளிப் பிழம்பாக ஒளிவிட்டுப் பெருகி, அடுத்துத் தமிழ்ப்பாக்கள், பல நூற்றாண்டுகளுக்கு ஊமையாகி வாயடைத்துப் போகச் செய்துவிடுகிறது. ஆதலால், இது, வரலாற்றை முட்டாள் நிலைக்கு இறக்கி விடுகிறது. மற்றவர்களோடு நானும் சேர்ந்து கொண்டு, இக்கொளுக் களிலிருந்து, நம்புதற்குரிய வரலாற்றினைத் துருவிக் காணும் முயற்சியில் பல ஆண்டுகளை வினாக்கிவிட்ட பின்னர், அவை, மெய்ம்மை, பொய்ம்மைகளின், மரபுவழிச் செய்திகள், கற்பனை யூகங்களின், சிக்கறுத்துக் காணலாகாக் கருத்துக் குழப்பம்; ஆகவே, அரசர்களின் குடிவழிப்பட்டியலை வகுப்பது பயனற்றவை என்ற முடிவிற்கு வந்தேன். முடிந்தவரை, இப்பாக்களிலிருந்து, சில அரசர்களின் வாழ்க்கை பற்றிய ஒருசில குறிப்புகளைக் கண்டு கொள்ளலாம். நலங்கிள்ளி : கரிகாலன் இறப்பிற்குப் பின்னர், அவன் கண்ட பேரரசு, சிறுசிறு நாடுகளாகப் பிளவுண்டு போயின. ரேனாடு, தங்களைச் "சோடர்" (டகரம், தமிழ் ழகரத்திற்கு ஈடான தெலுங்கு எழுத்து ஆதலின்) என அழைத்துக் கொள்ளும் தெலுங்குச் சிற்றரசர்களால் ஆளப்படலாயிற்று. அவர்கள் ஆட்சிக் காலத்தில், தெலுங்கு, கல்வெட்டுக்களில் பயன்படுத்தப்பட்டு, மெல்ல மெல்ல எழுத்துருவ மொழி யாகிவிட்டது; சில நூற்றாண்டுகளில், அது இலக்கிய மொழியாகவும் ஆகிவிட்டது. சோழர் அரியணையில், பெரும்பாலும், கரிகாலனை அடுத்து அமர்ந்தோனாகிய நலங்கிள்ளி (இதற்கான அகச்சான்று இல்லை ஆயினும்), சேர,