பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/348

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கரிகாலனுக்குப் பிற்பட்ட சோழ அரசர்கள் 341 காற்சிலம்பினையும், நீண்ட கோல்தொழில் அமைய செய்யப்பட்ட குறுகிய கைவளைகளையும் உடைய இளம் மகளிர், மணல் மேட்டில் அமர்ந்து, பொன்னால் செய்யப் பட்ட காய்களைக் கொண்டு கழங்காடி மகிழும் அத்துணை அணித்தாக ஓடும் ஆன்பொருநை ஆற்றின் வெண்மணல் சிதறுமாறு, உரம் வாய்ந்த கரங்களையுடைய கொல்லன், வடித்து, அரங்கொண்டு கூர்மைசெய்து கொடுத்த, நெடிய காம்பு செருகப்பட்ட கோடாலி வெட்டுதலால், மணல் நாறும் மலர்க் கொத்துக்களைக் கொண்ட காவற்காட்டு மரங்கள், அடியற்று விழ, வெட்டும் ஓசை, தன்னுடைய பேருர் வீதிகளிலும், நெடிய மதில் குழ்ந்த காவல் மிக்க தன் அரண்மனையகத்தும் சென்று ஒலிக்கவும், அது கேட்டும், வந்து எதிர்க்கும். எண்ணம் இல்லாமல், இனிதே இருக்கும் அந்த அரசனோடு, வானவில் போலும் வண்ணமலர்மாலை அணிந்து கொண்டு, போர் முரசு முழங்கப் போரிடுகின்றனை என்பது நினக்குப் புகழினைத் தாராது, நாணித்தலை குனியத்தக்கது நின் செயல் , ஆகவே, அது கைவிடுக". "அடுநை ஆயினும், விடுநை ஆயினும், நீ அளந்து அறிதி நின் புரைமை வார்கோல், செறிஅரிச்சிலம்பின் குறுந்தொடி மகளிர் பொலஞ்செய் கழங்கின் தெற்றி ஆடும் தண் ஆன்பொருநை வெண்மணல் சிதையக், கருங்கைக் கொல்லன் அரம் செய் அவ்வாய் நெடுங்கை நவியம் பாய்தலின் நிலை அழிந்து வீகமழ் நெடுஞ்சினை புலம்பக் காவு தொறும் அடிமரம் தடியும் ஒசை, தன் ஊர் . . நெடுமதில் வரைப்பின் கடிமனை இயம்ப, ஆங்கு இனிது இருந்த வேந்தனொடு, சங்கு நின் சிலைத்தார், முரசம் கறங்க * . . . . . . . . - மலைத்தனை என்பது நானுத்தகவு உடைத்தே" - s’ - - புறம் 36.