பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொடக்க காலத்தில் வெளிநாட்டு வாணிகம் 27 தென்னிந்தியப் பரதவர்கள் அப்பண்டங்களைத் தம்முடைய படகுகளில் ஏடனுக்கும், கிழ்க்கு ஆப்பிரிக்கக் கடற்கரைக்கும் கொண்டு சென்றனர் என்பதையும் இணைத்துக் கொள்ளலாம். . - ‘. . "கி. மு. 2600-இல் ஆட்சி புரிந்திருந்த, எகிப்திய அரச மரபில் நான்காவது மரபில் வந்த மெர்னெரே (Menere) என்ற அரசரின்கீழ், உயர் குடிமகனாகச் சிறப்புற்றிருந்த, அசுவான் (Asswan) இனத்து அர்க்ஹஅப் (Harkhwl) என்பானின், கல்வெட்டுகளில், கீழ்க்காணும் குறிப்புகள் இடம் பெற். றுள்ளன: "நறுமணப் புகை தரும் மெழுக்கு கருங்காலிமரம், நவதானியம், சிறுத்தைப் புலி, தந்தம், தடிகள் மற்றும் சிறந்த பொருள்களைக் கொண்ட பொதி மூட்டைகள் ஏற்றப்பட்ட 300 கழுதைகளோடு தெற்கு துபியாவில் (Southern Nubia) உள்ள 'யாம் (Yam) நாட்டிலிருந்து இறங்கி வந்தன. இதில் கூறப்படும் கருங்காலி, ஆப்பிரிக்கக் கருங்காலி ஆகலாம். ஆப்பிரிக்கக் கருங்காலியைவிட உயர்தரமானதும், தொன் மைக் காலத்தில் இந்தியாவிலிருந்து, பர்ஷியன் வளைகுடா விற்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கிருந்து, அராபியர்களால் ஆப்பிரிக்கக் கடற்கரைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து கி. மு.1500 போலும் பிற்காலத்தில், மேலை நைல் நதிமூலம் எகிப்துக்குக் கொண்டு செல்லப்பட்டதுமாகிய இந்தியக் கருங்காலியாகவும், இது இருக்கக்கூடும். இத் தேதிக்குப் பின்னர் (கி. மு. நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த) திருவாளர் தியோபிரஸ்டஸ் (Theophrastus) என்பார், இம்மரத்தை இந்தியாவிற்கு மட்டுமே உரியதாக்குமளவும், திருவாளர் விரிஜில் (Virgil) என்பவர், (Georgics 166-17) இந்தியாவிற்கே உரிய தனிச்சிறப்பு வாய்ந்ததாகக் கூறுமளவும், இந்தியக் கருங்காலி, பெருஞ்சிறப்பு வாய்ந்ததாகிவிட்டது. பின்வரும் அதிகாரம் ஒன்றில் நவதானியங்களும், சிறுத்தைப்புலியும், ஆப்பிரிக்காவுக்குப் பிற்பட்ட காலத்தில் ஏற்றுமதி செய்யப்பட்டன என்பது விளக்கப்படும். ஈண்டுக் குறிப்பிடப்பட்ட இவ்விரண்டும் தென்னிந்தியாவிலிருந்தே சென்றன. ஆதலும் கூடும். - 3