பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/352

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கரிகாலனுக்குப் பிற்பட்ட சோழ அரசர்கள் - 345 நலங்கிள்ளி எனக்கூறப்படும், சிறந்த தேர் வீரனாகிய திருவில் தேர் வண்கிள்ளி என்பானின் தம்பியை நோக்கிக் கூறுவதான புறம் : 43 லும் இது கூறப்பட்டுளது. "கொடுஞ்சிறைக் - கூருகிர்ப் பருந்தின் ஏறுகுறித்து ஒரீஇத் தன்னகம் புக்க குறுநடைப் புறவின் தபுதி அஞ்சிக், சீரை புக்க வரையா ஈகை உரவோன் மருக!" - . - புறம் : 43 : 4-8, (வளைந்த சிறகுகளையும், கூரிய உகிரினையும் உடைய பருந்தின் தாக்குதலுக்குத் தப்பித் தன்னிடம் அடைக்கலம் புகுந்த, தத்தித் தத்தி நடக்கும் புறாவின் அழிவிற்கு அஞ்சித் தன் அழவிற்கு அஞ்சாது, துலாத் தட்டில் புகுந்த வரையாது வழங்கும் வள்ளலாம் வண்மையோன் வழியில் வந்தவனே!) பிற்காலத்தில், சோழர்கள், சூரிய மரபிற்கு உரியவராகக் கூறப்பட்டுள்ளனர். இதற்கான குறிப்பு எதையும், புற நானூற்றில் என்னால் காண இயலவில்லை. ஆனால், அவர்கள் சிபியின் மரபில் வந்தவர்களாயின், அவர்கள், திங்கள் மரபில் வந்தவராதல் வேண்டும்; காரணம், உஷிதரனின் மகனான சிபி, திங்கள் மரபைச் சேர்ந்த யாயாதியின் குடிவழியில்ன வந்தவனாதலின், மிக்க பாராட்டினுக்குரிய இராமாயண காப்பியத்தை இயற்றிய கம்பரும், இம்முரண்பாட்டினை உணர்ந்ததாகத் தெரியவில்லை; காரணம், சிபியை, சூரிய மரபினனான ராமனின் முன்னோனாகத் துணிந்து கொண்டுள்ளார். பத்ம புராணம், இம்மூன்று தமிழரசர் குலங்களையும் சூரிய வம்சத்துத் துர்வாசு வழியில் வந்தவராகக் Gloircirópg. (Padma Puranam V 250: 1-2, referred to by Pargiter. Anc. ind. History Trad. Page: 108), guólpffsienjig, erflug, gig;$Ei பாட்டினைக் கற்பித்துக் கொண்டவர்கள், புராணங்கள் பற்றித் தெளிவான அறிவிற்கு மாறாகக் குறைந்த அறிவினையே பெற்றுள்ளனர், பெண்பாற்புலவர், சிபியைச் சோழர்குலச் சிற்றரசன் எனத் துணிந்து கொண்டுள்ளார்.