பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/357

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

350 - தமிழர் வரலாறு இளவரசர்கள் ஒன்பதின்மரைச் செங்குட்டுவன் ஒரே நாளில் வெற்றி கொண்டான் எனக் கூறுகிறது. "ஆர்புனை தெரியல் ஒன்பது மன்னரை நேரிவாயில் நிலச்செரு வென்று”. • . - சிலம்பு : 28 : fi6 - 17. { போர்க்களத்தில், ஆத்திப்பூ மாலை அணிந்த ஒன்பது சோழ இளவரசர்களை வென்று). "மைத்துனவளவன் கிள்ளியொடு பொருந்தா ஒத்த பண்பினர் ஒன்பது மன்னர், இளவரசுபெறாஅர். ஏவல் கேளார் வள நாடழிக்கும் பண்பினராதலின் ஒன்பது குடையும் ஒருபகல் ஒழித்தவன்." - சிலம்பு : 28 : 18 - 122. "தன மைத்துனன் வளவன் கிள்ளியொடு ஒத்துவராத, அவன் பெற்ற இளவரசு உரிமையை ஏற்றுக் கொள்ளமறுத்த, அது காரணமாக, நாட்டுவளம் அழித்த ஒன்பது சிற்றரசர்களின் ஒன்பது குடைகளையும், ஒருநாள் போரில் அழித்த செங்குட்டுவன். இவ்வளவன் கிள்ளி, இன்றைய எழுத்தாளர் சிலரால், கிள்ளிவளவனாகக் கொள்ளப்பட்டுள்ளான். மேலே எடுத்துக் காட்டிய பாக்கள் உறுதி செய்வதுபோலக் கிள்ளிவளவன் மிகப் பெரிய போர்வீரன், சேரர் தலைநகரை, ஒரேபகலில் அழித்துத் தரைமட்டம் ஆக்குமளவு அச்சேரரோடு கொடும்பகை உடையவன் என்பதைக் கண்டிருந்தும், அவன், சேரன் செங்குட்டுவனின் துணை நாடினான், அல்லது பெற்றான் என்பதை நம்புவது நம்மால் இயலாது. கிள்ளி, வளவன் என்ற இருசொற்களும், வறிதே, சேர அரசர்கள் என்று மட்டுமே பொருள்பட்டுச் சோழ நாட்டின் எந்த அரசனைக் குறிக்கவும் வழங்கப்பெறும். ஆகவேதான், நாம் ஆய்ந்து கொண்டிருக்கும் அக்குறிப்பிட்ட சோழன்