பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/358

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கரிகாலனுக்குப் பிற்பட்ட சோழ அரசர்கள் 351 குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் என அழைக் கப்பட்டுள்ளான். செங்குட்டுவன் படைத்துணையை வேண்டிப் பெற்றவன், இளவரசனே அல்லது ஆட்சியில் இருக்கும் பேரரசன் அல்லன், ஆகவே, நெடுமுடிக்கிள்ளி, ஒரு பட்டத்து இளவரசன். அல்லன். ஆகவே, திருவாளர், கிருஷ்ணசாமி அய்யங்கார் கொண்டது போல, இந்தச் சோழனை, நெடுமுடிக் கிள்ளியாகக் கொள்வது தவறு. Manimekalai in its Historical Setting grairo shrajcár -2%ffluff, பக்கம் 35-இல் நெடுமுடிக்கிள்ளி, என்பானைக் செங்குட்டு வனின் சமகாலச் சோழனாகக் கொண்டுள்ளார். இது, செங்குட்டுவனின் சம காலத்தவன், சோழன் பெருநற்கிள்ளி எனக் கூறும் சிலப்பதிகார உரை பெற கட்டுரைக் கூற்றுக்கும், அவன், இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியாவன் எனக் கூறும், உரைபெரு கட்டுரையின் இப்பகுதிக்கான அடியார்க்கு நல்லார் உரைக் கூற்றுக்கும் முரண்பாடாக உளது. திருவாளர் கிருஷ்ணசாமி அய்யங்கார் அவர்கள், மரபு வழிச்செய்திக்கு மதிப்பளிப்பவராய் இருந்தும், உரைபெருகட்டுரையும், அதற்கான அடியார்க்கு நல்லார் உரையும், தெளிவாக உணர்த்தும் செய்திகளைக் காட்டிலும், சிலப்பதிகாரமும், மணிமேகலையும் சம காலத்தவை என்ற தன் கொள்கைக்கே, முதலிடம் தருகிறார். மணிமேகலை அழகுக்கு அடிமைப்பட்டு, அதனாலேயே உயிரிழந்துபோன சோழ இளவரசன் உதயகுமாரனின் தந்தையாவன், இக்கிள்ளிவளவன் எனக் கூறுவதன் மூலம், மிகப்பெரிய தவறு செய்கிறார், திரு. கனகசபை அவர்கள். (1800 ஆண்டுகளுக்கு முந்திய தமிழர் : பக்கம் : 77) மணிமேகலை, முழுக்க முழுக்க, ஒரு கட்டற்ற கற்பனைக் கதை. வரலாற்று மூலமாகக் கொள்வதற்கு அறவே தகுதி அற்றது. அதில், நாகபுரத்தைச் சேர்ந்த புண்ணியராசன் என்பான், கிள்ளிவளவன் நட்பைப் பெறுவான் வேண்டி, ஒருமுறை, கலம் ஏறிக் காவிரிப்பூம்பட்டினம் சென்றிருந்த போது, ஆங்கு, மணிமேகலைக்கு ஒப்பார், நாவலந்தீவாம்