பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/360

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கரிகாலனுக்குப் பிற்பட்ட சோழ அரசர்கள் 353 செய்வதற்கு வேண்டும் மிகப் பெரிய தாழி பண்ணவேண்டின், இப்பேருலகையே திகிரியாகக் கொண்டு, பெருமலையையே, உரையாசிரியர் மேருமலை எனப் பொருள் கொண்டுள்ளார். மண்ணாகக் கொள்வாயாக எனக் கூறியுள்ளார். "அன்னோன் கவிக்கும் கண்ணகன் தாழி வனைதல் வேட்டனையாயின், எனையாது உம் இருநிலம் திகிரியாப், பெருமலை மண்ணா வனைதல் ஒல்லுமோ நினக்கே". - புறம் : 228 : 12 : 15 பெருநற்கிள்ளி : புறநானூறு விளக்கம் அளிக்கும், பழைய சோழர் குலத்தில் வந்து சிறப்பு வாழ்ந்த கடைசிக் காவலன் பெருநற்கிள்ளி என அழைக்கப்பட்டான். சோழ நாடுமுழுவதையும், தன் ஆட்சிக் கீழ்க்கொண்டுவருவதன் முன்னர்க் கீழ்ப்படிய மறுத்த சோழச் சிற்றரசர்களையெல்லாம், அவன் வெற்றி கொள்ள வேண்டியிருந்தது. அத்தகு போர் ஒன்று பின்வருமாறு கூறப்பட்டுளது. "போர்த்தொழில்" மாட்சிமைப்பட்டு, விரைந்து பாயவல்ல குதிரைப் படையோடும், கார்முகில் போலும் நிறம் வாய்ந்த தோலால் ஆன பரிசை ஏந்திய படைவீரர்களோடும், பகைவர் போர் முனைகள், பாழ்பட்டுப் போகச் சென்று, அவர்தம் உண்ணுநீர்க் குளங்களில் போர்க்களிறுகளை நீராட்டி, அப்பகைவர் நாட்டில், மூட்டிய நெருப்பின் ஒளி, கதிர்காயும் ஞாயிற்றின் செந்நிறம் போல் தோன்றி நிற்க, இடம் இல்லை எனக் கூறுமளவு சென்றுதங்கும் பெரிய படையினையும், பிறர் படைத்துணை வேண்டாதே பெறலாகும் வெற்றியினையும் பகைவர் குருதிக் கறைபடிந்து புலால் நாறும் வாளினையும், பூசிப் புலர்ந்த சந்தனச் சாந்தினையும் உடைய, பகைவர்க்கு அச்சம் தரும் தலைவ! வள்ளையும், ஆம்பலும், பகன்றையும், பழம் நிறைப் பாகலும் உடையதாகிக், கரும்புக் காடல்லது, பிறகாடறியாச், சிறந்தவயல் வளம் பாழுற்றுப் போகக் காவல் செறிந்த