பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/361

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

354 தமிழர் வரலாறு பகைவர் நாட்டை, ஒள்ளி தீயூட்டிப், பகைவர் அஞ்சத்தக்க கடும்போர், நின்கருத்திற்கேற்பப் புரிந்தன, பெரும ! உன் போர்க்களிறுகள்", "வினைமாட்சிய விரை புரவியொடு மழை உருவின தோல் பரப்பி முனை முருங்கத் தலைச் சென்று, அவர் விளைவயல் கவர்பூட்டி, மனைமரம் விறகாகக், கடிதுறைநீர்க் களிறுபடிஇ, எல்லுப்பட இட்ட சுடுதி விளக்கம், செல்சுடர் ஞாயிற்றுச் செக்கரில் தோன்றப், புலம் கெட இறுக்கும் வரம்பில் தானைத், துணைவேண்டாச் செருவென்றிப், புலவுவாள், புலர் சாந்தின், முருகன் சீற்றத்து உருகெழு குருசில்! மயங்கு வள்ளை, மலர் ஆம்பல், பனிப்பகன்றைக், கனிப்பாகல், கரும்பல்லது காடறியாப், பெருந்தண்டணை பாழாக, ஏம நன்னாடு ஒள்ளெரி ஊட்டினை, நாம நல்லமர் செய்ய, ஒராங்கு மலைந்தன, பெரும! நின் களிறே". - - - - புறம் : 16. பின்னர் அவன் ராஜசுய யாகம் செய்து, முடிசூட்டு விழாவை ஆரிய முறையில் மேற்கொள்வதும் செய்தான். அதனால், அவன், ராஜகுயம் வேட்ட பெருநற்கிள்ளி என அழைக்கப்பட்டான். தஞ்சாவூரைச் சார்ந்த பிற்காலச் சோழர்களால், கரிகாலனோடு ஒருங்குவைத்து, மிகப் பழைய குலமுதல் வனாக நினைவு கூரவும் பட்டான். Midethe Leydan