பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/363

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

356 தமிழர் வரலாறு பெருநற்கிள்ளியுமாவர். இம்மூன்று அரசர்களின் காலத் திற்குப் பின்னர், பின்வரும் அதிகாரத்தில் விளக்க இருக்கும், ஒர் அரசியல் பெருமாற்றம் இடம் பெற்றதாகத் தெரிகிறது. மேலே கூறிய அரசர்களுக்கு மட்டுமேயல்லாமல், வேறு பிற பன்னிரண்டு சோழர்களுக்கும் கொளுக்களின் ஆசிரியரால், பாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவர்கள் அனைவரும், சோழ நாட்டில் ஆட்சி செலுத்தியிருக்க இயலாது. ஒரு நிகழ்ச்சியில் ஒன்பது சோழர்கள், பத்தாவது சோழன் ஒருவனோடு போரிட ஒன்று கூடியிருந்தனர் எனக் கேள்வியுற்றோம் ஆதலின், சோழர் அரியணையில் அமர்ந்து, ஆட்சி புரியாத சோழகுல இளவரசர்களே, அக்கொளுக்களில் கூறப்பட்டுள்ளனர் எனக் கொள்ளுதல் வேண்டும். { { }