பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/366

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கரிகாலனுக்குப் பிற்பட்ட சோழ அரசர்கள் 359 திரு. அய்யங்கார் அவர்கள் காட்டும், சான்றுகளுள் முதலாவதான சான்று, புறம், 76, 77, பாக்களுக்குப் "பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ் செழியனை இடைக்குன்றுார் கிழார் பாடியது" என்ற கொளுவாகும். பாண்டியன், தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் வென்ற தலையாலங்கானப் போர்குறித்து அறிய வேண்டிய செய்திகள்: 1) போர் நிகழந்த இடம் ஆலங்கானம் என்பது , 2) போரில் வெற்றி பெற்றவன், பாண்டியர் குலத்தவன் என்பது; 3) அவன் செழியன் என அழைக்கப்பட்டான் என்பது; 4) போர் மேற்கொண்ட போது அவன் நனி இளையன் என்பது 5) போர் மேற்கொண்டு சென்ற அவன், இனமாலையாம் வேம்பும்; பகைவர் அரணை முற்றுகையிடச் செல்வதை உணர்த்தும் உழிஞை மாலையும் அணிந்து கொண்டான் என்பது, 6) அவன் பகைவர், சேரனும், சோழனும் ஆகிய வேந்தர் இருவரும், திதியன், எழினி, எருமையூரன், இருங்கோவேண்மாண், பொருநன் என்ற வேளிர் ஐவரும் என்பது, 7) வென்று அவர் முரசு கவர்ந்தான் என்பது, 8) இறுதியாகக் களவேள்வி செய்தான் என்பது. தலையாலங்கானப் போர் குறித்துப் பாடிய புலவர்கள், அப்போரின் வெற்றித் திருமகனாம் நெடுஞ்செழியன், இடைக்குன்றுர் கிழார், கல்லாடனார், நக்கீரர், பொதும்பில் கிழார் மகனார், ஆலம்பேரி சாத்தனார், குடபுலவியனார், மாங்குடி மருதனார், ஆகப் புலவர் எண்மர் ஆவர்; இவர்தம் பாடல்களில் ஆலங்கானப்போர் குறித்த விளக்கங்களைத் தரும் பாடல்கள் பதினாறு. இப்பதினாறு பாக்களில் எந்த ஒரு பாட்டிலேனும், பெறவேண்டிய எட்டு விளக்கங்களையும் ஒருசேரப் பெற்றுவிட முடியுமா என்றால் இயலாது. தலையாலங்கானத்துப் பெருவீரன் நெடுஞ்செழியன் பாடியபாட்டு புறம் : 72, "நகு தக்கனரே நாடு மீக்கூறுநர்" எனத் தொடங்கும் அப்பாட்டில், மேலே கூறிய விளக்கங்கள் எட்டும் கிடைக்கின்றனவா என்றால் இல்லை. அது