பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/371

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

364 . - தமிழர் வரலாறு "கிண்கிணி களைந்தகால், ஒன்கழல் தொட்டு. பால் விட்டு அயினியும் இன்று அயின்றனன்" "விழுமியம்: பெரியம் யாமே, நம்மில் பொருநனும் இளையன்; கொண்டியும் பெரிது என எள்ளிவந்த வம்ப மன்னர்" - புறம் : 76, 77, 78. என்ற இடைக்குன்றுார்க் கிழாரின் பாக்களில்தான், வென்றோன் செழியன் என்பதும், தோற்றோர் எழுவர் என்பதும் கூறப்பட்டிருப்பதோடு, வேறு எப்புலவர் பாட்டிலும் வெளிப்படாத அவன் இளையோன் என்பது கூறப்பட்டுளது. அதுமட்டும் அன்று, "இளையன் இவன் என உளையக்கூறி.படையமை மறவரும் உடையம்யாம் என்று, உறுதுப்பு அஞ்சாது உடல்சினம் செருக்கிச் சிறுசொல் சொல்லிய சினங்கெழுவேந்தர்" (புறம் : 72) என்ற பாட்டுடைத்தலைவன் குரலை "விழுமியம் பெரியம் ? யாமே, நம்மில் பொருநனும் இளையன் கொண்டியும் பெரிது என எள்ளிவந்த வம்ப மன்னர்" (புறம் : 78) என அப்படியே எதிர் ஒலிக்கவும் செய்துள்ளது. ஒருவன் பால் அமைந்துவிடும் கல்வி, செல்வம், வீரம், விழுப்புகழ்களின் அளக்கலாகா மிகுதி, கண்டவழி, வியப்புற்று நிற்கும் நிலையில், "இத்துணை உயர்ந்து நிற்பான் யாவனோ?” என வினா எழுப்புவது இயல்பு ; அது பாட்டின் மரபும் கூட அது வியப்பு அடிப்படையாக எழும் வினாவே அல்லது அறியாமையின் அடிப்படையில் எழும் வினா வல்வில் ஒரியின் வில்லாற்றல், கொடைவளங்களை அறிந்து, வன்பரணர், புறப்பாட்டு ஒன்றில் (152) "கொலைவன் யார் கொலோ?. ஒரி கொல்லோ? அல்லன் கொலோ?" என வியந்து வினா எழுப்பி வாய்பிளந்து நிற்பதும், பெயர் அறியாப் படைமறவன் ஒருவனின் பேராண்மை கண்டு