பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/372

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

१ கரிகாலனுக்குப் பிற்பட்ட சோழ அரசர்கள் 365 வியக்கும் பெயர் அறியாப் புலவர் ஒருவர், "யார்கொலோ? அளியன்!” எனப் பிறிதொரு புறப்பாட்டில் (257) வியப்பு அடிப்படையாக எழும் வினா எழுப்பி நிற்பதும் காண்க. இம்மரபை யொட்டிப் புலவர் இடைக்குன்றுார் கிழார், புறம் : 77ல், "யார்கொல்" என வினா எழுப்பியுள்ளார். இம்மரபு உணராத காரணத்தால், புறம் : 76-இல் அவன் ஒருவன், அவன் பகைவர் எழுவர் என்பதையும், அவன் ஆற்றலும் பெருமையும் அறியாது வந்துவிட்ட அப்பகைவர்களின் அறியாமையினையும், அவன், வேப்பந்தாரோடு உழிஞை மாலையும் அணிந்து சென்று, அப்பகைவர் எழுவரையும், ஒரு தானாகி நின்று வென்றதையும் விளங்கக் கூறியிருப்பதையும், புறம் 77-இல் போர்க்களம் நோக்கிப் போகும் அப்போதும், அவன் இளமை மாறா நிலையினினக் கண்ணுற்று "யார்கொல்" என வினா எழுப்பி நிற்பதையும் கண்டு, "புலவருக்குத் தெரிந்தவனான, 76ஆம் புறப்பாட்டுத் தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனும், புலவருக்குத் தெரியாதவனான 77ஆம் புறப்பாட்டுடு நளிை இளையோனும், வேறுவேறுபட்ட இருவர் அல்லர், இருவரும் ஒருவனே என்பது நம்பக் கூடாத ஒன்று". It is possible to believe. that the hero - victor of Talayalanganam, known to the poet, and the boy-hero, unknown to the poet, were one and the same “person” (Page : 413) - எனக் கூறி எள்ளி நகையாடியுள்ளார், திருவாளர் அய்யங்கார் அவர்கள். - ... - தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனின் புகழ்பாடும் புலவர் எண்மரும், அவனும், அப்போர் குறித்துப் பாடியிருக்கும் நற்றிணை, நெடுந்தொகை, புறநானூறு ஆகிய வற்றில் கலந்து கிடக்கும், பதினாறுக்கும் மேற்பட்ட அப்பாக் களை அரிதின் முயன்று தேடிப்பிடித்து, துணுகி ஆய்ந்து, அப்போர் குறித்த பல்வேறு செய்திகளையும் அறிந்து கொண்டு தெளிவுற்ற நிலையில் அமைத்திருக்கும் கொளுக்கள், முழுக்க முழுக்க உண்மை வாய்ந்தவை: பழந்