பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/373

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

366 தமிழர் வரலாறு தமிழர் வரலாற்றை வரைவார்க்கு, வலுவான சான்றாக அமைய வல்லவை ; ஆகவும், அக்கொளுக்களை வரைந் தார்தம் ஆழ்ந்த அறிவினையும், அரு முயற்சியினையும், அருஞ்செயலையும் பாராட்ட மனமில்லையாயினும், அவை ஏற்கதக்கன அல்ல என இழிவுபடுத்துவது, நல்ல வரலாற்றுத் திறனாய்வு நெறி ஆகாது. திருவாளர் நீலகண்ட சாஸ்திரியார் அவர்கள், தம்முடைய சோழர் வரலாறு மற்றும் ஆட்சி முறைபற்றிய திறனாய்வு graúlá), (Studies in Chola History and Administration) Georgißscir குறித்த, திருவாளர் பி. டி. எஸ். அவர்களின் இம்முடிவை விரிவாக ஆராய்ந்து, அது தவறான முடிவு என உறுதி செய்து, பின்வரும் தீர்ப்புகளை வழங்கியுள்ளார். "தொகை நூலைத் தொகுத்த ஆசிரியர், அப்பாக்களைப் படித்தும், மரபு வழிச் செய்திகளை ஏற்றும், அந்நூலைத் தொகுத்தபோதே, அக்கொளுக்களைத் தாமே எழுதியிருக்க இயலாதா, ஒவ்வொரு பாவிற்கான கொளுக்கள், அப் பாக்கள், தொகை நூலாகத் தொகுக்கப்படுவதற்கு முன்னரே, அப்பாக்களோடு இணைந்திருக்க இயலாதா என்ற வினாக் களுக்கு விடைகாண வேண்டியது இன்றியமையாதது என்பது திருவாளர் பி. டி. எஸ். அவர்களுக்குத் தெரியவில்லை”. Why the author of the anthology could not have himself read the poems and accepted traditional information at the time the anthology was made, and supplied the colophons; Further, Why the colophons might not have been added to individual poems earlier than their entry in to an anthology are matters which are apparently not deemed worthy of consideration by Mr. Srinivasa Aiyangar. Page : 9. - கொளுக்கள் வரலாற்றுச் சான்றுகளாக ஏற்கத்தக்கன அல்ல என்ற தம்முடிவிற்கு அரண்செய்ய "எல்லாப் பாக் களுக்கும் கொளுக்கள் கொடுக்கப்படவில்லை. புறம் 226ஆம் எண் பாட்டோடு அது நின்றுவிடுகிறது" என்ற திரு. பி. டி. எஸ். அவர்களின் வாதத்திற்கு, "உண்மையில் எல்லாப் பாக்களுக்குமே கொளுக்கள் கொடுக்கப்பட்டிருந்தன. சில