பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/375

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

368 - தமிழர் வரலாறு அத்தகையோரின் தவறான வழிகாட்டு நெறியினையும் வன்மையாக மறுத்துள்ளார், திருவாளர் நீலகண்ட சாஸ்திரியார் அவர்கள். இதோ அவர் கூறுவன காண்க: திரு. வெங்கையா அவர்கள், "புறநானூறு எண்ணற்ற சோழ அரசர்களின் பெயர்களை...அறிவிக்கின்றன.ஆனால், அவை தரும் வரலாற்றுச் சான்றுகளையும் குறிப்பிட்ட ஒரு சோழ அரசனோடு தொடர்புபடுத்தும் செய்திகளையும் ஏற்றுக்கொள்வதில் பெரிதும், விழிப்புடையவராக இருக்க வேண்டும்." எனக் கூறுகிறார் எனக் கொளுக்கள் பற்றிய அவர் கொன்கையை அறிவித்துவிட்டு, அதைக் கீழ்வரும் வரிகளால் வன்மையாகக் கண்டித்துள்ளார். "தொகை நூல்கள் தரும் செய்திகள்பால், இத்தகு கட்டுப்பாட்டினை விதிக்கும் திரு. வெங்கையா அவர்கள் அந் நிகழ்ச்சிகள் நிகழ்ந்ததற்கு அதிகம் இல்லை என்றாலும், ஐந்து நூற்றாண்டு காலம் கழித்து, பதினொன்றாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட கல்வெட்டுகளில் கூறப்பட்டிருக்கும் செய்திகளைச் சிறிதும் தயங்காமல் ஏற்றுக்கொள்கிறார். "ஏதேனும் ஒரு செய்தி, பனைஒலை ஏடுகளிலோ, அதனினும் எளிதாகப் பாழ்பட்டுப் போகும் ஒரு பொருள் மீதோ எழுதப்படாமல், கல்லின் மீதும், செப்புத் தகட்டின் மீதும் பொறிக்கப்பட்டிருக்கிறது என்பதனாலேயே, அது முழு நம்பிக்கைக்கு உரியதாம் தகுதியைப் பெற்றுவிடுமா என்ற வினாவையும், அத்தகு கல்வெட்டுச் செப்பேடுகளில், மிகப்பெரிய பொய்யான இடைச்செருகல்கள் இடம் பெற்றுவிடவும், இலக்கிய ஆவணங்களைப் பெயர்த்து எழுதும் படிவங்களில் உண்மையான மரபு வழிச் செய்திகள், அப்படியே இடம் பெற்று விடவும் இயலாத என்ற வினாவையும் எவர் ஒருவரும் எழுப்பக் கூடும். - "கல்வெட்டுத் திறனாய்வாளர்களின், இலக்கியச் சான்றுகளை அணுகும் நிலையில் மேற்கொள்ளும் தேவையில்லா விழிப்புணர்வும், கல்வெட்டுச் செப்பேடுகளில் இடம் பெற்றிருக்கும் மிகப்பெரிய ப்ொய்ச் சான்றுகள்டால் காட்டும் சிறுபிள்ளைத்தனமான நம்பிக்கையும், அவர்களின் போக்கு குறித்த முறையான ஐயப்பாட்டினை எழுப்புகிறது.