பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/377

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14. பாண்டிய அரசர்கள் முதுகுடுமிப் பெருவழுதி ! தொகைப் பாக்களிலிருந்து விளக்கம் பெறக் கூடிய முதல் பாண்டிய அரசன், முதுகுடுமிப் பெருவழுதி.அவன், பிராமண வேள்வியாசிரியர்கள் செய்த யாகங்களுக்குப் பேராதரவு தந்து பெரும்புகழ் கொண்டான். யாகங்கள் பலவற்றிற்குத் துணை நின்றவன் எனும் பொருளுடைய, "பல்யாக சாலை" என்ற சிறப்பினைத் தன் பெயர் முன் பொள்ளுமளவு, யாகங்களுக்கு ஆதரவு அளித்தான். வேத யாகம் செய்ய, ஒர் அரசன், முதற் கண் சத்திரிய கோத்திரம் சிலவற்றோடு இணைக்கப்பட வேண்டும். பண்டைய பாண்டிய மன்னர், அவ்வகையில் முழுமையாகவும், முறையாகவும் ஆரிய வளையத்துக்குள் உட்படுத்தப்பட்டு, ஒரு கோத்திரத்துக்கு உரியவராக ஆக்கப்பட்டனர் என்தற்கான அகச்சான்று எதுவும் இல்லையாகவே அத்தொடர், பற்பல வேத யாகங்களைச் செய்த ஒருவன் எனும் பொருள் உணர்த்துவதாகக் கொள்ளத் தேவை இல்லை. புறம் : 15-இல் இவ்வாறு கூறப்பட்டுளது : "குற்றம் இல்லாத நல்ல தரும நூலிலும், நான்கு வேதங்களிலும் சொல்லப்பட்ட, பெறுதற்குரிய புகழ் வாய்ந்த இரு பொருள்களோடு, நெய்யை நிறையப் பெய்தலால், புகை, பெருக எழுந்து படரப் பல்லாற்றானும் மாண்புற்ற, கெடலறியாத் தலைமை வாய்ந்த யாகங்களை முடித்துத் துரண் நடப்பெற்ற அகன்ற வேள்விச் சாலைகள்" . . . .புரையில் நற்பனுவல், நால் வேதத்து அருஞ்சீர்த்திப் பெருங் கண்ணுறை