பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/379

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37.2 தமிழர் வரலாறு தமிழ் அரசர்களாலும், ஆறாம் நூற்றாண்டு முடிவுற்ற பின்னர்த் தமிழ் நாடு, முழுமையாக ஆரிய மயமாக்கப் பட்டுவிட்ட பின்னரே மேற்கொள்ளப்பட்டது. பழங்காலப் பாண்டியர், அப்பட்டத்தை எந்நிலையிலும் மேற்கொண் டிருக்கவில்லையென்றாலும், இக்கல்வெட்டு ஆசிரியரால், ஈண்டு, அப்பட்டம், அவனுக்குக் கொடுக்கப்பட்டுவிட்டது.) துணையை வேண்டுவாயாக என, வேதங்களில் வல்ல வேள்வியந்தனர் நற்கொற்றணிடம் கூற, அவனும் அவ்வாறே வேண்ட, வெற்றிமாலையணிந்த வேந்தன், அப்போதே, வேள்விச்சாலை முன் நின்று, அவ்வூரை, வேள்விக்குடி எனும் பெயர்சூட்டி, அந்நகர்க்கு அழகும், திருவும் பெருக வழி செய்து, நீர் வார்த்துக் கொடுத்துவிட்டான் : அவ்வகையில், அவ்வூர், நெடுங்காலம், தானம் பெற்றவரால் அனுபவிக் கப்பட்டு வந்தது. பின்னர், எண்ணற்ற அதிராசர்களை வென்று துரத்தி, அவர் நாட்டைக் கைக்கொண்டுவிட்ட களப்பிரர் எனும் கலி அரசன், அவ்வூரின் தான உரிமையை அழித்துத் தானே எடுத்துக்கொண்டான்." (களப்பிரரால் வென்று துரத்தப்படுவதன் முன்னர், நாட்டை நெடுங்காலம் ஆண்டு வந்த பண்டைய அரசர்களின் வழிவந்தவர் போலும், இவ்வதிராஜாக்கள்.) (கொல்யாளை பல ஒட்டிக் கூடாமன்னர் குழாம் தவிர்த்துப் பல்யாக முதுகுடுமிந் பெருவழுதி எனும் பாண்டியாதிராஜன் நாகமா மலர்ச்சோலை நளிர்சினை மிசை வண்டுஅலம்பும் பாகனூர்க்கூற்றம் என்னும் பழனக்கடக்கை நீர் நாட்டு சொற்கண்ணாளர் சொலப்பட்ட ச்ருதி மார்க்கம் பிழையாத, கொற்கைக்கிழான் நற்கொற்றன் கொண்ட வேள்வி முற்றுவிக்க கேள்வி யந்தணாளர் முன்பு கேட்க என்று எடுத்துணர்த்த வேள்விச் சாலை முன் நின்று, வேள்விகுடி என்ற பதியைச் சீரொடு திருவளரச் செய்தார், வேந்தன் அப்பொழுதே நீரோட்டிக் கொடுத்தமையான நீடுபுக்கி துய்த்தபின், அளவரிய ஆதிராஜனா அகல நீக்கி, அகல் இடத்தைக் களப்ரன் என்னும் கலிஅரசன் கைக்கொண்டு அதனை இறக்கிய பின்)