பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/383

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

376 தமிழர் வரலாறு (அடுத்தது, பண்டைப்புலவர் வரிசையில், கடைசியில் இருப்பவராகிய பரணரால், அகம் :181ல் கூறப்பட்டிருப்பதும் "நான்மறை முதுநூல் முக்கண் செல்வன்") அரசன் புகழ், நிலம், ஆகாயம், சுவர்க்கம் என்ற மூன்றும் ஒன்றுகூடிய ஒரு கூட்டமாக அடுக்கப்பட்ட வரிசைக்கண், முதற்கண்ணதாகிய நீர்நிலைக்கண் நிற்கும் உலகின் கீழும், மேலதாகிய ஆன் உலகத்தும் வாழ்வாரை அச்சுறுத்த வல்லதாம் என்றும் அப்பாட்டில் கூறப்பட்டுளது. "முப்புணர் அடுக்கிய முறைமுதல் கட்டில் நீர்நிலை நிவப்பின் கீழும், மேலது ஆனிலை உலகத்தானும் ஆனாது உருவும் புகழ்", . - புறம் : 6 : 5 - 6. இவை அனைத்தும் ஆரியக் கருத்துகள். அவை, இப்பாட்டில் இடம் பெற்றிருப்பது, ஆரியக் கலாச்சார வெள்ளம், கரிகாலன் காலம் தொட்டுத் தமிழ் மக்கள் உள்ளத்தில், கடுவேகமாகப் பெருக்கெடுத்துப் பாயத் தொடங்கிவிட்டது என்பதைக் காட்டுகிறது. மேலும், வடக்கில் இமயத்தையும், தெற்கில் குமரியையும், கிழக்கிலும், மேற்கிலும் இரு கடல்களையும் எல்லையாகக் கொண்ட ஒரே நாடு இந்தியா என்ற கொள்கை, இப்பாட்டில், தமிழ் இலக்கியத்தில் முதன் முறையாக இடம் பெற்றுளது. அப்பகுதி "முதுகுடுமியின் புகழ், வடக்கில், பனி தவழும் பெருமலைக்கு அப்பாலும், தெற்கில், அச்சம் தரும் குமரிக்கு அப்பாலும், கிழக்கில், சகரரால் தோண்டப்பட்ட கீழ்க்கடலுக்கு அப்பாலும், மேற்கில் நனி மிகப் பழைய கடலுக்கு அப்பாலும் பரவியிருந்தது" எனக்கூறுகிறது : "வடாஅது, பனிபடு நெடுவரை வடக்கும்; தெனாஅது, உருகெழு குமரியின் தெற்கும்; குணா.அது கரைபொரு தொடுகடல் குணக்கும்; குடாஅது தொன்றுமுதிர் பெளவத்தின் குடக்கும்" - புறம் : 6 : 1.4.