பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/384

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாண்டிய அரசர்கள் 377 (புறநானூற்றில், இக்கருத்தில், வேறு இருகுறிப்புகளும் உள்ளன. முதலாவது, தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் காலத்தது :- "தென்குமரி வடபெருங்கல்” (புறம் : 17 : 1). இரண்டாவதாக, மிகவும் பிற்பட்ட காலத்த வனாகிய, பெரும்பாலும் 6 வது நூற்றாண்டைச் சேர்ந்த வனாகிய, பெருங்கோக்கிள்ளிக் கோப்பெருஞ் சோழனைக் குறிப்பது: அதில், ஒர் அன்னப்பறவை, குமரிக்கரையில் அயிரை மீன் அருந்திச் சோழ நாட்டைக் கடந்து, வட நாட்டுப் பெருமலைக்குச் செல்வதாகக் கூறப்பட்டுளது : "குமரியம் பெருந்துறை அயிரை மாந்தி, வடமலைப் பெயர்குவை யாயின், இடையது சோழ நன்னாட்டுப்படினே". - புறம் : 67 : 6-8) நால்வேத நாகரிக வளர்ச்சிக்குப் பேராதரவு நல்கும் பெருஞ்செயல்கள் அல்லாமல், முதுகுடுமிப் பகையரசர் களோடு போர் மேற்கொள்வதும் செய்திருந்தான். குறிப்பிட்ட ஒரு சோழ, அல்லது பாண்டிய அரசனோடு போரிட்டதாகக் கூறப்படவில்லை. சில குறுநிலத்தலைவர் களை அவன் வென்றிருக்கக் கூடும். புலவர் இவ்வாறு கூறுகிறார் : "பகைப்படையைச் சேர்ந்த தேர்கள் விரைந்து ஒடி ஒடிப் பண்ணிய குழிகளைக் கொண்ட அப்பகைவரின் பேரூர்த் தெருக்களில், வெள்ளிய வாயையுடைய கழுதைகளை, ஏர்களில் வரிசை வரிசையாகப் பூட்டி உழுது, அப்பகைவரின், அகன்ற பெரிய அரண்களைப் பாழ் படுத்தின, பகைவர் நாட்டின் பறவைக் கூட்டம் ஓயாது கூடியிருந்து ஒலிக்கும் வண்ணம் வளம் கொழிக்கும் விளை நிலங்கள், வெள்ளிய தலையாட்டம் கொண்ட, போர்ச் செருக்குமிக்க குதிரைகளின் குளம்புகளால் பாழுற்றுப் போமாறு, போர்த் தேர்களை விரைந்து போக்கினை ஆடும் இயல்பும், பெரிய கழுத்தும், பருத்த கால்களும், சினம் கொழிக்கும் சிறு கண்களும், ஒளி விளங்கும் தந்தங்களும் உடைய நின்படைக் களிறுகளை, அப்பகைவரின், காவல் மிக்க உண்ணு நீர்க்குளங்களில் குளிப்பாட்டினை." அவன்