பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/392

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாண்டிய அரசர்கள் 385 தொடித்தோள் துடுப்பின் துழந்த வல்சியின், அடுகளம் வேட்ட அடுபோர்ச் செழிய! ஆன்ற வேள்வி, அடங்கிய கொள்கை, நான்மறை முதல்வர் சுற்ற மாக, மன்னர் ஏவல் செய்ய, மன்னிய வேள்வி முற்றிய வாய்வாள் வேந்தே! நோற்றோர் மன்ற, நின் பகைவர், நின்னொடு மாற்றார் என்னும் பெயர் பெற்று, ஆற்றார் ஆயினும், ஆண்டு வாழ் வோரே” - புறம் : 26. புறம் 24, நெடுஞ்செழியன் மழலைக் கூற்றம், முத்துற்றுக் கூற்றங்களை இணைத்துக்கொண்டதாகக் கூறுகிறது. |முத்துறு வெற்றி, அடியார்க்கு நல்லாரால் முத்துர் என வழங்கப்பட்டு, அவ்வுரையாசிரியரால், பாண்டிய முன்னோன் ஒருவன் செயலாகக் கூறப்பட்டுளது. "அங்ங்னமாகிய நிலக்குறைக்குச் சோழ நாட்டெல்லையிலே முத்துர்க் கூற்றமும், சேரமானாட்டுக் குண்டுர்க் கூற்றமும் என்னும் இவற்றை, இழந்த நாட்டிற்காக வாண்ட தென்னவன்" சிலம்பு : 11 : 17 - 22 உரை அது ஒரு பழங்கதை ; ஆனால், நெடுஞ்செழியன் வெற்றி, அவன் காலத்தே வாழ்ந்த ஒருவரால் உறுதி செய்யப்ட்ட ஒர் உண்மை நிகழ்ச்சி.) "வரையாது வழங்கும் பெரிய கொடை வள்ளலாம் வேளிர் தலைவனாம் எவ்வி என்பானுக்குரிய, வயல்களுக்கு நீர் வழங்கும் எண்ணற்ற மதகுகளைக் கொண்ட மழலைக் கூற்றத்தோடு, நெல்வயல்களின் கயல்மீன்களைக் கவர்ந்து உண்ணும் நாரைக்கூட்டம், வயல்களின் அயலிடத்தாவான நெற்போர்களின் உறங்கும், நெல் வளம் மிக்க, பொன்னால் ஆன முகபடாம் அணிந்த யானைகளைக் கொண்ட பழம் பெரும் குடியினராம் வேளிர்க்கு உரிய முத்துற்றுக் கூற்றத்தையும் கைக்கொண்டே வெற்றிக்கு உரிய, வெண்கொற்றக் குடையினையும், வெற்றிக்கொடியால் அழகு பெறும் தேரினையும் உடைய செழிய!" - -