பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/393

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

386 தமிழர் வரலாறு "ஒம்பா ஈகை மாவேள் எவ்வி - புனலம் புதவின் மிழலையொடு, கழனிக் கயல்ஆர் நாரை போர்வில் சேக்கும் பொன்அனி யானைத் தொன்முதிர் வேளிர் குப்பை நெல்லின் முத்துறு தந்த, கொற்ற நீண்குடைக், கொடித்தேர்ச் செழிய - புறம் : 24 : 18 - 23. so பிற பாக்களால் கொடுக்கப்படும் செய்தியை, மதுரைக் காஞ்சி உறுதி செய்கிறது. அவை கொடுக்கும் செய்திகளோ, மேலும் சில செய்திகளை இணைக்கிறது. நெடுஞ்செழியனின் மேற்கூறிய வெற்றிகளோடு, அவன் நெல்லால் பெயர் பெற்ற நெல்லின் ஊர் எனும் ஊரைக் கைக் கொண்டதையும். “综序 சான்ற உயிர் நெல்லின் ஊர் கொண்ட உயர் கொற்றவ" - மதுரைக்காஞ்சி : 87 - 88. சேரப் பேரரசுக்கு அடங்கிய குட்டநாட்டு மக்களை வெற்றி) இது. உறுதியாகத் தமிழ்நாட்டு எல்லைக் கண் உள்ள பேருரும், பழங்காலத்தில் தமிழ் நாட்டின் துறைமுகமும் ஆன நெல்லுரே ஆகும். நச்சினார்க்கினியர், இந்நகரை, மதுரைக்கு வடக்கில் நெடுந் தொலைவில் இல்லாத சோழநாட்டுக் கடற்கரை ஊராம் சாலியூராகக் கொள்வதையே விரும்புகிறார். நெடுஞ் செழியன், இதைத் தன் கப்பற் படைத்துணையால் கைப்பற்றினான்" கொண்டதையும் ("பல்குட்டுவர் வெல்கோவே' ஷெ 105 செல்வவளம் கொழிக்கும் முது வெள்ளிலை என்ற நகரையும் அழும்பில் என்ற நாட்டினையும் கைப்பற்றியதையும், ("முதுவெள்ளிலை...தொழில் கேட்ப”. ஷெ 19 124: "அரும்பில் அண்ண நாடிழிந்தனரும்" - ஷெ : 345) அது, குறிப்பிடுகிறது. - - - - & . நெடுஞ்செழியன் குறித்த பாடல்களில், மதுரைநாட்டை, ஆரிய மயமாக்கும் நிலை, விரைந்து முன்னேறுகிறது என்பது காணப்படும். மேலே எடுத்துக்காட்டிய ஒரு பாட்டில், நான்கு வேதங்களிலும் வல்ல பிராமணர்களின் வழிகாட்டு நெறியின் கீழ், வேந்தன் வேள்வி யாகம் செய்தான் என்பது கூறப்