பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/401

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

394 - தமிழர் வரலாறு குதித்து விட்டனரோ என எண்ணி வியக்கத்தகும் அவர்களின் மகளிர், வானளாவ வரிசை வரிசையாக உள்ள மாடங்களின் நிலா, முற்றங்களிலே காட்சி அளிப்பர். அவர்கள் மீதிருந்து எழும் நறுமணம், நகரின் நால்வேறு தெருக்களிலும் சென்று மணக்கும். அவர்தம் முகங்கள், மலைமுகட்டில் கூட்டப் பட்டுக் காற்றில் ஆடிக் கொண்டிருக்கும் கொடிகளால் அவ்வப்போது மறைக் கப்படுவதால், முகிலால் மறைப்புறம் முழுமதி போல் காட்சி அளிக்கும். வலியரான் மெலிவுற்று முறை கேட்டு வருவார், நீதி கிடைக்குமோ, கிடைக்காதோ என்ற அச்சமோ, தோல்வி உற நேர்ந்து உள்ளத்தில் நடுக்கமோ கொள்ளாவாறு, ஒருவர் மீது வெறுப்போ, பிறிதொருவர் பால் விருப்போ கொண்டு விடாமல், துலாக் கோல்போல், நடுநிலை பிறழாது, நின்று தீர்ப்பு வழங்கும் அறங்கூர் அவை, அண்மையில் அமைந்திருக்கும். நன்மை தீமைகளைக் கண்டறியவல்ல அறிவாற்றலால் சிறந்து, உள்ளத்தைத் தீதின் பால் செல்லவிடாது அடக்கித் தம்மை விட்டு அகன்றுவிடாவாறு. அன்பையும், அறனையும் தம்மகத்தே அடக்கிப் பழியொடு பட்டன தம்மை அண்டாவாறு அகற்றிப் பெரும்புகழ் வாய்ந்து, காவிதிப்பட்டம் வழங்கப்பெற்ற அமைச்சர் பெருமக்களின் பெருமனைகள் அடுத்து அமைந்திருக்குக் கொடுப்பது குறைபடாக் கொள்வது மிகைகொளா, வணிக அறம் பிழையாப் பெருஞ்செயலாலும், மாநிதி உடைமை யாலும் புகழ் வாய்ந்த, மலைபடு பொருட்கள், நிலந்தரு பொருட்கள், கடல்படு பொருட்களாம் பல்வகைப் பண்டங்களில் வாணிகம் நடாத்தும், நாடாளும் மன்னர் நிகர். வணிகப் பெருமக்களின் வாழிடங்கள், அடுத்து இடம் பெற்றிருக்கும். அரசியல் அங்கமாம், ஐம்பெருங்குழுவில், அமைச்சர் நீங்க உள்ள நால்வராம், புரோகிதர், படைத் தூதுவர், ஒற்றர் ஆகியோர் குடியிருப்புக்கள் அடுத்து வரும். இவ்விடங்களை அடுத்து, சங்கறுத்து வளையல் முதலியன வணைவார், முத்து மணிகளுக்குத் துளையிடுவார், பொன்னணி புனையும் தட்டார், செப்புக்கலங்கள் செய்வார்,