பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/404

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாண்டிய அரசர்கள் x- 397 கோட்பாட்டாளர் அல்லர், அதனால், அணங்குகள், ஆவியுருவப் பேய்கள் பற்றிய விளக்கங்களைக் கூறத் தவறிவிட்டார், அதற்கு மாறுகத் தொட்டுத் தொடர்பு கொள்ளத்தகு இனமக்கள் குறித்து, அவர் மிகமிகத் தெளிவாக உணர்த்திருப்பதாகத் தெரிகிறது. தம் காலத்துக் கள்வர்களின் ஆடைவகைகள் அவர் கையாளும் படைக்கல வகைகளை, மிகவும் துணுக்கமாக விளக்கியுள்ளார். அவற்றை அப்படியே மீண்டும் உருவாக்கும் வாய்ப்பினை வழங்குவது நம்மால் இயலாது. தற்காத்துக் கொள்ளவும், தாக்கவும் உதவும் படைக் கலங்களே அல்லாமல், அக்கொடியவர்கள், மாளிகைகளின் மேற்கூரைகளையும், மதில்களையும் ஏறி உட்புக நூலேணிகளையும் உடன் கொண்டு செல்வர். என்றாலும், இரவின் நகர்க்காவல், தனி மிகப்பெரிதாம் ஆதலின் அப்படைக்கலங்கள் பயன்படுவ அல்ல. தம் காலத்திய நகர்க் காவலர்தலைவர் பற்றிய, புலவர் விளக்கம் நம்பக் கூடியதாயின், அவர்கள், வியத்தகு வகையில், திறமை வாய்ந்த, ஒப்புயர்வற்ற ஓர் அமைப்பினராவர். கள்வரையும், அவர்தம் வழிமுறைகளையும், சூழ்ச்சித் திறனையும் கண்டு கொள்ளவல்ல களவியில் அறிவினை முழுமையாகப் பெற்றவராவர். இவை அனைத்திலும் மேலாக அவர்தம் உயர்ந்த கடமையுணர்ச்சி மிகப்பெருமளவில், பாராட்டிற் குரியது. வீதிகளெல்லாம் வெள்ளப் பெருக்கெடுத்து ஒடப் பெருமழை பெய்யும் இரவின் நடுயாமத்தும், நகர்க்காவலாம் தம் கடமைமறந்து, செல்லாதிருப்பதோ, இமைப்போதேனும் உறக்கம் கொள்வதோ செய்யார். அத்தகு நகர்க்காவலர் படைத் தொகுதியால் காக்கப்பட்டு வந்தமையால், நகரம் கவரையறியாக் கடுந்துயிலில் ஆழ்ந்து விடுவதில் வியப்பேதும் இல்லை. ஆனால், அவ்வினிய அமைதிச் சூழ்நிலை, நெடும் பொழுது நிலைத்திருக்கவில்லை. பொழுது விடிவதற்கு நெடு நாழிகைக்கு முன்னரே, மலரும் பருவத்துப் பேரரும்புகளை ம்ொய்த்துக் கொண்டு, வண்டுக்கூட்டம் முரல்வதுபோல், பிராமணர்கள் வேதம் ஒத, நாம் கேட்கிறோம். இசைக் .'