பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/405

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

398 தமிழர் வரலாறு கருவிகள் இனிய இசையெழுப்பும் நிலையினவாக உள்ளனவா என்பதை உணர், இசைவாணர்கள், அக்கருவிகளில் எழுப்பும் இன்னோசை அடுத்துக் கேட்கத் தொடங்கிவிட்டது. இனிய கணவரோடு இன்பம் கண்டு உறங்கிய இல்லறத் தலைவியர், விழித்து எழுந்து தங்கள் மனைகளை, மாட்டுச் சானங் கொண்டு மெழுகித் தூய்மை செய்யலாயினர்; கள்விலை யாளர், கணப்பொழுதும் பின் தங்கி விடுவாரல்லர், வழக்க மான வாடிக்கையாளர் கூடியிருந்து குடிக்கும், கள் வழங்கு மிடங்களை நோக்கிக் களிப்போடு செல்லாயினர்; வீடுகள் தோறும், வாயிற்கதவுகள் திறக்கப்படுங்கால் எழும் கிரிச் எனும் ஒலி, நகரம், ஆழ்ந்த உறக்கத்திலிருந்து விரைந்து விழித்துக் கொள்கிறது என்பதை அறிவிப்பதாய் அமைந்தது. நெடுந்துயில் கொள்ளும் இயல்பினவாய கோழிச் சேவல் களின் கூலலோடு, அதிரமுழங்கும் முரசுகளின் முழக்கம், பல்வெறு பறவைகளின் பாட்டொலி, மயில்களின் அகவல், விலங்குப் புகவிடங்களில் அரசு வைத்து வளர்க்கும், களிறுகளின் பிளிறல், புலிகளின் முழக்கம் ஆகியனவும் பங்கு கொண்டன. செல்வர்களின் மாளிகை முற்றங்கள், பேணப்படும் பொருளாக முன்னாள் கருதப்பட்டு, இன்று குப்பபையாகிவிட்ட, சூடிக்கழித்து உதிர்த்த மலர்வாடல்கள் அகற்றப்பட்டுத் துப்புரவு செய்யப்பட்டன. பொழுது, விரைந்து புலரவும், பல்வறுே போர்க்களங்களிலிருந்து மீளும் வேந்தன் நாற்படை களிறுகள், குதிரைகள், கைப்பற்றிய கோட்டைகளின் அணி நலம் சிறந்த அழகிய வாயிற்கதவுகள், பகைவர் நாட்டை எரியூட்டிக் கவர்ந்து, பகைகொல்லும் வேற்படைக் காம்புகளையே, கோலாகக் கொண்டு ஒட்டி வந்த பசுநிரைகள் ஆகிய திறைப் பொருள்களையும் உடன் கொண்டு வருவவாயின, வெற்றி கொள்ளப்பட்ட சிற்றரசர் கூட்டம், மதுரை மாநகரத்து வேந்தன் விழித்து எழுந்ததும், அவன்பால் சமாதானத்தை இரந்து பெறுவான் வேண்டி, அவ்வெற்றிப் படைகளின் அணி வகுப்பைத் தொடர்ந்து வரலாயினர். வெற்றி, கொண்டு மீளும் நாற்படைகளின் பேரணி, அதைத் தொடர்ந்து தோற்ற அரசர்கள் திறை தந்து பணிந்து போக வருவது ஆகிய இவை, மதுரை மாநகர்க்கு