பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/411

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15. சேர அரசர்கள் பெருஞ்சேரல் ஆதன் : இவ்வேந்தன் வெண்ணிப் போர்க்களத்தில் கரிகாலனால் தோற்கடிக்கப்பட்டு, அப்பழி துடைத்தற்பொருட்டு அப் போர்க்களத்திலேயே வடக்கிருந்து உயிர்துறந்தான். ஆகவே, இவன், கி.பி. 400க்கு முன்னர் அதாவது, கரிகாலன் சோழ நாட்டின் மரபுவழி எல்லைக்கு அப்பாலும் தன் பேரரசை விரிவாக்கியதற்கு முன்னர் வாழ்ந்திருக்க வேண்டும். இவ்வாதன் அவ்வப்போது பாடப்பட்ட பல்வேறு பாக்களில் குறிப்பிடப்பட்டுள்ளான். ஆனால், ஐந்து ஆறாம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த பேரரசர்கள் குறுநிலத்தலைவர் களின் புகழ் பத்துப்பாட்டு, பதிற்றுப்பத்து போலும் பெயரிய பாக்கள் எவையும், இவன் புகழ்பாட இயற்றப்படவில்லை. அவன் வாழ்க்கையில் அறியப்பட்ட ஒரே நிகழ்ச்சி, மேலே குறிப்பிட்ட ஒரே பொருள் குறித்த, கீழே வரும் கையறு நிலைச் செய்யுட்பொருள் ஒன்றே. முழவு மார்ச்சனை இடுதல் ஒழிய, அதாவது முழங்குவதைக் கைவிட, யாழ் பண்ணிசை எழுப்புவதைக் கைவிட அகன்ற பெரிய பால்பானை, பால் இன்மையால் கவிழ்த்துப் போடப்பட்டு நெய்கடை தலை இழக்க, பாணர் பொருநர், புலவர் போலும் இரவலர், வண்டுகள் மொய்க்கும் புதுமதுவை உண்ணுவதை மறக்க, உழவர், உழவுத் தொழில் ஒசைகளைக் கேளாது ஒழிய அகன்ற நெடிய தெருவுகளையுடைய சிறுரர்கள் விழக்களை இழந்துபோக, முழு நிலா வந்து கூடிய நாளின் மாலைப் போழ்தில், ஞாயிறும் திங்களும் ஆகிய இரு சுடர்களும் தம் முன் எதிர் நின்று பார்த்து, இறுதியில், அவற்றுள் ஒரு சுடர், புல்லிய மாலைப் போதில், மலையுள் புகுந்து மறைந்தாற் போலத், தன்னையொத்த பேரரசன், வெற்றியாக எண்ணி