பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/421

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

414 - தமிழர் வரலாறு உட்படுத்தி ஆய்வுசெய்யுமோ, அந்த அடிப்படையினவாய, ஐவகைப்பட்டநிலைபேறுடைய உணர்வுகளின் இயற்கை களாம். ஐம்பெரும் பூதங்களின், கற்பனைவளம் சார்ந்த எண்ணிக்கை வகைப்படுத்தி அளிக்கின்றன. இது போலும் குறிப்பீடுகள், தமிழர் உள்ளங்களை, ஆரியக் கருத்துகள் முழுமையாகக் கவர்ந்துவிட்ட பின்னரே இடம் பெறக்கூடும். அதுபோலவே, பிற்காலப் பாக்களில் மட்டுமே இடம் பெறும் பொன்முடி சூடிய இமயம்லை பற்றிய குறிப்பும் இடம் பெற்றுளது. அகச்சான்றுகளைக் கொண்டு மதிப்பிடும் நிலையில், பெருஞ்சேரலாதன் குறித்து, அவன் காலப் புலவர் ஒருவர் பாடியபாட்டினும், காலத்தால் முற்பட்டதாம் ஆதலின், பெருஞ்சேரலாதனுக்குப் பிறகு வாழ்ந்தவன் உதியன், என நாம் முடிவு செய்யலாம். பதிற்றுப் பத்து : இவ்வுதியனுக்குப் பிறகு அரசு கட்டில் ஏறிய அரசர்கள் பற்றிய செய்திகளைப் பதிற்றுப் பத்திலிருந்து பெறலாம். ஒவ்வொன்றும் வேறுவேறுபட்ட நீளம் உடையவாய, பொதுவாகச், சராசரி இருபது அடிகளைக்கொண்ட பத்துப்பத்துப் பாடற்றொருதிகளாகப் பத்துத் தொகுதிகளைக் கொண்ட தொகைநூல் பதிற்றுப்பத்து, தனிப்பாடல்களாக அல்லாமல் ஒவ்வொரு தொகுப்பும், குறிப்பிட்ட ஒரு பேரரசன் அல்லது ஒரு குறுநிலத்தலைவன் பற்றி விரிவாகப் பாராட்டும், வரையறுக்கப்பட்ட காரணம் குறித்துப் பாடப்பட்டடி பத்துப்பத்துப் பாடல்களைக் கொண்ட பத்இ! தொகுப்புக்களைக் கொண்ட முதல் தொகை நூல் இது. இவற்றுள் முதல் பத்தும், இறுதிப் பத்தும் கிடைக்கவில்லை. ஒவ்வொரு பத்தும், ஒரு சேரவேந்தன் அல்லது, சேரர்குலத்தலைவனைப் பற்றியது. ஒவ்வொரு பத்தும், பாக்கள் மட்டுமே இடம்பெற்ற, கையெழுத்துப் படிகளில் அல்லாமல், பாடல்களோடு, அவற்றிற்கான உரைகளும் இடங்கொண்ட கையெழுத்துப் படிகளில் மட்டுமே, இடம் பெறும் பதிகங்களைக் கொண்டுளது. அப்பதிகங்கள், அப்பாடல்களின் பாட்டுடைத் தலைவர்கள் பற்றிய,