பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/422

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேர அரசர்கள் - 415 மூலங்களில் காணப்படாத வரலாறு அல்லது கற்பனைக் கருத்துக்களைக் கொடுத்து உதவுகின்றன. வழக்கம் போலவே இன்றைய எழுத்தாளர்கள், பதிகங்களையும், பாக்களையும் ஒன்றாகவே கொண்டு மயங்கி, அவை அனைத்துமே பதிற்றுப் பத்துத்தான் எனக்கூறுவதோடு, அகச்சான்றாக எடுத்து ஆளக்கூடிய தகுதியை, மூலம், பதிகம், உரை ஆகிய மூன்றிற்குமே ஒரு படித்தாக வழங்குகின்றனர். பதிற்றுப்பத்து ஆசிரியர்களெல்லாம், கி. பி. ஐந்து, ஆறாம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த பிராமணர்கள். ஆகவேதான். அப்பாக்கள், ஆரியக்கருத்துகள், ஆகமப் பழக்க வழக்கங் களால் பொங்கி வழிகின்றன. ஆகவே, அவை தமிழ் நாட்டில் ஆகமநெறிக் கோயில்வழிபாடுகள் பரவியதற்குப் பின்னர்ப் பாடப்பட்டனவாதல் வேண்டும். அவ்வகையில், இரண்டாம் பத்தின் நான்காம் பாடலின் தொடக்கவரிகள், அப்பாட்டு டைத்த தலைவன், "நிலம், நீர், காற்று, விசும்பு என்ற இந்நான்கினையும் போல் அளந்து காணமாட்டாப் பெருமையும், நாண்மீன்களும், கோள்களும், திங்களும், ஞாயிறும், ஊழிப்பெருந்தீயும் ஒருங்கு கூடி நின்ற வழிப் பிறக்கும் பேரொளி போலும், புகழ்ப்பேரொளியும் உடையவனாகப் புகழப்பட்டுள்ளான். இப்பகுதியில், கிரேக்க வானியல்கவையிலிருந்து பெறப்பட்ட கருத்தான நாண்மீன் களுக்கும், கோள்களுக்குமிடையிலான வேறுபாடு மட்டுமல்லாமல், வானிடை நாண்மீன்களும், கோள்களும் ஒருயுகத் தொடக்கத்தில் ஒரிடத்தே ஒன்றுகூடும் என்ற இந்திய, பிற்காலக் கோட்பாடு பற்றிய குறிப்பும் இடம் பெற்றுளது. "நிலம் நீர் வளி விசும்பு என்ற நான்கின் அளப்பு அரியையே; நாள் கோள் திங்கின் ஞாயிறு கனை.அழல் ஐந்து ஒருங்கு புணர்ந்த விளக்கத்து அணையை" - - பதிற்று : 14 : - 4.