பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/428

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேர அரசர்கள் - & 42] சின்னமாகக் கடம்பமரம் வளர்க்கப்பட்டிருந்த கடலிடை நாடு ஒன்றிற்குக் கலத்தில் சென்றதே, இவ்வரசர்களின் மிகப்பெரும் வீரச்செயலாம். இவை போலும் மரங்கள், காவல் மரங்கள் எனப்படும். ஒவ்வொரு தமிழ் வேந்தனும், அல்லது குறுநிலத்தலைவனும், தன்னுடைய ஆட்சித்திறனின் அடையாளமாக, ஒருகால், அவன் அரசகுலச் சின்னமாக, அவன் பேராண்மையோடு தொடர்புடையதாக்கிக் குறிப்பிட்ட ஒரு மரத்தை வளர்த்து வந்தான். அம்மரத்தை வெட்டி வீழ்த்துவது, அவ்வரசனின் ஆட்சிக்கொடியைக் கைப்பற்றியது போலாம். இக்கடம்பமரமும், பானவாசிக் கடம்ப அரசர்கள் தங்கள் அரசகுலப் பெயரைப் பெறுவதற்குக் காரணமாம் கடம்ப மரமும் ஒன்றாம் எனக் கருதப்படுகிறது. நெடுஞ்சேரலாதன் சிறப்பு விளங்கிய கி. பி. ஐந்தாம் நூற்றாண்டில், இக்கடம்பர் உயர்நிலை பெற்றிருந்தமையால், மேலே கூறிய ஒருமைப்பாடு, இயலக்கூடாத ஒன்றன்று. இப்பெருஞ்செயலின் பாராட்டே, இரண்டாம் பத்து முதற்பாட்டின் பொருளாகும். அது, அப்பத்தின் இரண்டு, ஏழு, பத்து ஆகிய பாக்களிலும் குறிப்பிடப்பட்டுளது. வெட்டப் பட்ட அம்மரத்துண்டைத் தன் கலத்தில் ஏற்றிச்சென்று, தங்கள் பகையரசர்களின் காவல் மரத்துண்டங்களை ஏனைய அரசர்கள் பயன்படுத்துவது போலவே, அம்மரத்துண்டங்களிலிருந்து, போர்முரசு செய்துகொண்டான். "மிகப்பெரும் நாற்படையினைக் கொண்ட நெடுஞ்சேரலாதன் பெரிய கடலின்கண் பகைவர்களை வென்று ஒட்டி, அவர்தம் காவல் மரமாம் கடம்பினை அறுத்துச்செய்த, முரசின் கண் முழங்கினாற் போல" எனக் கூறும் அகநானூற்றுப் பாடல் ஒன்றில், ஒர் உவமையில், நெடுஞ்சேரலாதன் அவ்வாறு செய்தான் என, மாமூலனாரால் கூறப்பட்டுளது. "சால்பெரும் தானைச் சேர லாதன் மால்கடல் ஒட்டிக் கடம்பு அறுத்து இயற்றிய பண்ணமை முரசின் கண் அதிர்ந்தன்ன". . - அகம் : 847 : 3 - 5.