பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/434

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேர அரசர்கள் 427 அந்த இமயத்தை (அம்மலைத் தொடர்க்கு அவர் இட்டு அழைத்த பெயர்) எல்லாவற்றினும் உயர்ந்த மலைமுகடு, வாணவெளியின் காற்றழுத்த மண்டலத்தை எட்டிப்பிடித்துத் தன்னை ஏறி அடைய முயலும் மனித முயற்சியை இரக்க மற்று நகைத்த வாறே நிற்க, ஒன்று, தன்கீழ் உள்ளதைவிட உயர்ந்து, ஒன்றன் மேல் ஒன்றாக எண்ணிக்கையால் பெருகி நிற்கும் வரிசை வரிசையான மலை முகடுகளாவன, நிலத்துப் புறப்பகுதியின் வரிசை வரிசையான மடிப்புக்களாகக் கருதாமல் தனித்த ஒரு பெரும் கல்லாம் - ("பெருங்கல்" - புறம் : 17 : "நெடுவரை” புறம் : 6 : 1) என அப்புலவர்கள் கருதினர். தமிழ்ப் புலவர்கள்பால் பொருந்திவிட்ட, இமாலயத்து நிலஇயல் கூறுபாடு பற்றிய அறியாமையே, கரிகாலனை, மிகப்பெரிய அம்மலைத் தொடரின் உச்சியை அடையவும், திபேத்து வரை செல்ல அம்மலையை ஊடுறவும், பிற தமிழ் அரசர்கள், அவன் முன் மாதிரியைப் பின்பற்றவும் செய்தமைக்குக் காரணமாம். - நெடுஞ்சேரலாதன் பெயரைச் சுற்றி எழுந்த பிறிதொரு கட்டுக்கதை ஒன்றையும், புலவர் மாமூலனார் பதியவைத்து உள்ளார். அவன் காலத்தே பாடப்பட்ட பாட்டாம் பதி னொன்றாம் பதிற்றுப்பத்துப் பாடல் அளிக்கும் சான்றுப்படி, யானைமீது அவன் கொணர்ந்த செல்வம் ("யானைப் பொலன் அணி எருத்தம் மேல் கொண்டு பொலிந்த நின் பலர்புகழ் செல்வம்"), மாமூலனார் காலத்தில், அழகிய அணிகலக்குவியல்களாகவும், பொன்னால் ஆன பாவை யாகவும், வைரக்குவியலாகவும் பெருகிவிட்டது. ("பாடுசால் நன்கலம், பொன் செய்பாவை, வைரமொடு" - அகம் : 1.27). உம்முடுஞ்சேரலாதன் குறித்த பதிற்றுப்பத்து இரண்டாம் பத்தின் பதிகத்தில், அக்கற்கனை மேலும் பலசெய்திகளைக் கொண்டதாகி அளவிலும் பெரிதாகி விட்டது. "அழகாக உருண்டோடி வரும் அருவிகளைக் கொண்ட இமையத்தே வில் பொறித்தான். அலை ஒலிக்கும் கடல்களை எல்லை யாகக் கொண்ட தமிழகம் முழுவதும் தன் செங்கோல் செல ஆட்சி நடத்தினான். தக்க பெரிய புகழ் பெருகப் பெரிய புகழ் வாய்ந்த ஆரிய அரசர்களை வெற்றி கொண்டான். நயம் 28