பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/441

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

434 தமிழர் வரலாறு அடிப்படையில், திருவாளர் கிருஷ்ணசாமி அய்யங்கார் அவர்கள் ஆரியர்களின் குடியேற்றத்திற்கு அப்பாலும், மெளரியர்கள், அவர்களுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த ஆந்திரர்களின் கீழ், எண்ணற்ற ஆரியப்படையெடுப்பும் நிகழ்ந்தன என்ற உறுதியான முடிவினை உருவாக்கியுள்ளார் ஆதலின் இப்பொருள், இத்துணை விரிவாக ஆராயப்பட்டது. கடலோட்டிய வேல்கெழு குட்டுவன் : கடலைப் புறங்காட்டி ஒடப்பண்ணிய வேலுக்கு உரியவனாகிய குட்டுவன், அதாவது கடலோட்டிய வேல்கெழு குட்டுவன். அவன் புகழ்பாடும் பதிற்றுப் பத்து ஐந்தாம் பத்தின் பதிகத்தின்படி, நெடுஞ்சேரலாதன் மகனாவன். ஆனால், இக்குட்டுவனின் தாயின் பெயரைக் குறிப்பிடும் வரி, நம்புதற்கு இயலாவாறு பிழைபட்டுளது. வடவரை அஞ்சப் பண்ணும், வானளாவ உயர்ந்த கொடி உடையவனும் குடவர் கோமானும் ஆகிய நெடுஞ் சேரலாதனுக்குச் சோழன் மணக்கிள்ளி என்ற மகன்' என்கிறது. (ஐந்தாம் பத்து : பதிகம் : 1 . 3) "வடவர் உட்கும் வான்தோய் வெல்கொடிக் குடவர் கோமான் நெடுஞ்சேரலாதற்குச் சோழன் மணக்கிள்ளி ஈன்ற மகன்", ஒரு ஆண், பிறிதொரு ஆணுக்கு மனைவியாதல் இயலாது ஆதலின். ஆம்மூலம் பிழைபட்டுளது என்றே நாம் கோடல் வேண்டும். இப்பாட்டைப் பதிப்பித்த ஆசிரியர் அந்த வரி களை எந்தக் கையெழுத்துப் படிவத்திலிருந்து எடுத்தாரோ, அந்தப் படிவத்தை நம்மால் பார்வையிட முடியாத வரை, அந்த வரிகளின் உண்மை வடிவம் யாது என்பதை ஊகிக்கவும் இயலாது. மேலும், பழந்தமிழப் பாக்களின் அழிந்து போன, செல்லரித்துப்போன பனை ஒலையிலான ஏட்டுப் பிரதிகள் காக்கப்பட்டிருக்கும் இழிந்த நிலையினை அறிந்த எவன் ஒருவனும், அவ்வரிகளில், அப்பிழை எவ்வாறு இடம் பெற்றுவிட்டது என்பதை ஆராயத் துணியமாட்டான். திருவாளர் எம். சீனிவாச அய்யங்கார் அவர்கள், மணக்