பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/442

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேர அரசர்கள் 435 கிள்ளியை, நெடுஞ்சேரலாதனின் தங்கை கணவனாகக் கொள்வதன் மூலம், அச்சிக்கலான் முடிச்சை அவிழ்க்கத் தைரியமாக முயன்றுள்ளார் (Tamil Studies: P.287). மலையாள நாட்டில், இன்று நடைமுறையில் இருக்கும் அரியணைக்கான உரிமை, மாமனிடத்திலிருந்து மருமகனுக்கு என்ற முறைமை, பண்டைக் காலத்திலும் இருந்ததாக அவர் கருதுகிறார். பழைய சேர அரசர்கள், தமிழர்கள் மருமக்கள் தாயத்தைப் பின்பற்றும் மலையாள அரச இனங்கள், கி. பி. பத்தாம் நூற்றாண்டிற்குப் பின்னரே உரிமையைத் தன் முன்னோர்க்கு மகன் என்ற முறிையல் பெற்றானேயல்லது, மருமகன் என்ற முறையில் பெற்றவனல்லன். குட்டுவன் வீரச்செயல்கள் : குட்டுவன் புகழ்பாடும் பரணரின் கூற்றுப்படி, அவன் வெற்றிச்செயல்கள், அவன் தந்தையின் வெற்றிச்செயல்கள் போலவே ஒரு சிலவாம். அரசவைப் புலவர்கள் செய்வது போலவே இப்புலவரால், தந்தையின் வெற்றிகள் எல்லாம் இவனுக்கும் ஏற்றி உரைக்கப்பட்டுள்ளன. "கற்களால் உயர்ந்த நெடிய மலையாகிகய இமயம் வடஎல்லையாக, தெற்கு எல்லை குமரியாக, அவற்றின் இடையே உள்ள நாட்டில், பகையரசர்களின், முரசுமுழங்கச் செய்யும் போர்கள் எல்லாம் கெட்டு அழிய, வெற்றி ஆரவாரம் உண்டாக, அப்பகையரசர் களின் புகழ் மிக்க நாடுகளுள் புகுந்து, அவற்றின் பண்டை நலங்களைக்கெடுத்து அழித்த, போரில் எதிர்ப்படுவாரை அழித்து வெற்றி கொள்ளும் நாற் படையினையும், பொன்மாலையினையும் உடைய குட்டுவனே?" என அவன் அழைக்கப்பட்டுள்ளான். பகையரசர் எழுவரின் மணிமுடி களை அழித்துப் பண்ணிய பொன்மாலையை மார்பில் அணிந்த எனும் சிறப்பும், தந்தையிடமிருந்து மகனுக்கு மாற்றப்பட்டுளது. “கல்லோங்கு நெடுவரை வடதிசை எல்லை இமயமாகத், தென்னங் குமரியொடு ஆயிடை அரசர்