பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/443

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

436 தமிழர் வரலாறு முரசுடைப் பெருஞ்சமம் ததைய, ஆர்ப்பு எழச் சொல்பல நாட்டைத் தொல்கவின் அழித்த போரடுதானைப் பொலந்தார்க் குட்டுவ!" - - - பதிற்று : 43 : 6 - 11. "எழுமுடி மார்பின் எய்திய சேரல்" - பதிற்று : 45 : 6. இவ்வரசனைப் பற்றிய பிறிதொரு பராட்டு, அவன் பெயரோடு, வேல் எறிந்து கடலைப் புறங்காட்டச் செய்த எனும் பொருள் தருவதான, "கடல் பிறக்கு ஒட்டிய வேல் கெழு" எனும் சிறப்பு அடைமொழியினை இணைக்க உதவிய ஒன்றாம். கடல் மீது கொண்ட இவ்வெற்றி அடுத்தடுத்துக் கூறப்பட்டுளது. "வெள்ளிய தலையாட்டத்தினையும், விரைந்த செலவினையும் உடைய குதிரையூர்நது செல்லும் நின்கால்கள், ஓவென ஒலிக்கும் அலைகளைக் கொண்ட குளிர்ந்த கடல் காற்றால் அலைப்புண்டு சிறுசிறு திவலைகளாக உடையுமாறு அக்கடலிடையே சென்று போரிட்டன." "கால் உளைக் கடும் பிசிர் உடைய, வால்உளைக் கடும்பரிப் புரவு ஊர்ந்த நின் படுத்திரைப் பனிக்கடல் உழந்த தாளே." - பதிற்று : 4 : 25 - 27. பகைவரின் வில்லிலிருந்து தொடுக்கப்படும் அம்புகளின் கடுமையைக் கெடுத்த வலிய வெண்மையான தோலால் ஆன கேடகத்தையும், அவற்றிற்கேற்ற மறப் பண்பு படைத்த படையினையும் உடைய வேந்தர் உள்ளே, மேகம் படிந்து குடித்தலால் குறையாமலும், ஆறுகள் வந்து புகுவதால் 孵 மிகாமலும், எதிர்த்து வீசும் காற்று எழுப்பும் அலைகளால் அசைதலையுடைய, மிகநிறைந்த நீரை உடைய முழங்கும் அலைகளோடும் கூடிய குளிர்ந்த கடலில், மணிபோலும் ஒளியினையுடைய வேற்படையை எறிந்து, அக்கடல் மீது வெற்றி கொண்டவர், நின்முன்னோருள்ளும் ஒருவரும் இல்லை : இப்பொழுதும் ஒருவரும் இல்லை."