பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/447

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

440 தமிழர் வரலாறு பெருமக்கட்டாழி, உன்னுடைய நோயற்று வலியுற்ற உடலினைக் காணாது ஒழிக. " "நுண்கொடி உழிஞை, வெல்போர் அறுகை சேணன் ஆயினும், கேள் என மொழிந்து புலம் பெயர்ந்து ஒளித்த களையாப் பூசற்கு, அரண் கடாவுறீஇ, அணங்கு நிகழ்ந்தன்ன மோகூர் மன்னன் முரசம் கொண்டு நெடுமொழி பணித்து அவன் வேம்பு முதல் தடிந்து முரசுசெய முரச்சிக், களிறுபல பூட்டி ஒழுகை உய்த்தோய்! கொழுவில் பைந்துணி வைத்தலை மறந்த துய்த்தலைக் கூகை கவலை கவற்றும் குரால் அம்பறந்தலை முரகடைதாயத்து அரசுபல ஒட்டித் துளங்கு நீர் வியலகம் ஆண்டு இனிது கழிந்த மன்னர் மறைந்த தாழி வன்னி மன்றத்து விளங்கிய காடே" - பதிற்று : 44 : 10 - 23. மோகூர் மன்னனுக்குப் பல குறுநிலத்தலைவர்கள் துணை புரிந்தனர் என்பது தெளிவாகத் தெரிகிறது. "வேற்படையைச் செலுத்தி எழும் பகைவர் முன்னணிப் படையின் இரு பக்கங்ளிலும் வரும் பக்கப்படைகளைப் போரிட்டு வெல்லும் கொடிய துாசிப்படையினையும் வெல்லும் போரினையும் உடைய முடிவேந்தர்களும் குறுநில மன்னரும் ஒன்றுகூடித் துணைவர, அதனால், வலுவுற்றுச் செருக்கு கொண்டு அவரோடு கூடிவரும் மோகூர் மன்னனின், வலுவான படையின் நிலைகெட்டுத் தடுமாறுமாறும் நெருக்கித் தாக்கி, குருதி படிந்து. கறைபட்ட கையினரான வீரர்களின் மார்புப் புண்களிலிருந்து ஒழுகும் குருதி, நிலத்தில் பாய்ந்தோடி, மழைவெள்ளம்போல் ஆங்காங்குள்ள பள்ளங்களை நிரப்பிப்பாய, இறந்து வீழும் பிணங்கள், குவியல்