பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/452

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேர அரசர்கள் 445 புனைதேர் நேமி உருளிய குறைந்த இலங்குவெள் அருவிய அறைவாய்." - அகம் : 251 : 6 - 14. இறுமாப்பு மிகுந்த இம் மோகூர் என்பான், குட்டுவனால் தண்டிக்கப்பட்ட மோகூரான் தானா? அல்லது அவன் பெயரே பூண்ட வேறு ஒருவனா என்பதைத் தெரிந்து கொள் வதற்கான வழியேதும் இல்லை. ஆனால், யாரோ, சில மோரியர் என்பார், அவன் பகைவராய், அவனைப் பணிய வைக்கக் கோசர் என்பாரை, முன்னதாக அனுப்பிவைத்தனர் என்பது மட்டும் உறுதி. கோசர் என்பார் துளுநாட்டில் வாழ்ந்தவராவர். "வாய்மையால் சிறந்த பெரிய அணிகலன்களை உடைய கோசர்க்கு உரிய, குடுமி உடையதான திரண்ட பச்சைக்காய் முற்றிய பாகற்பழத்தைத் தின்ற, பறைபோலும் வட்ட வடிவமான கண்களைக் கொண்ட தோகைகளையுடைய மயில்கள் மிக்க சோலைகளை உடைய துளுநாடு" "மெய்மமலி பெரும்பூண் செம்மல் கோசர் கொம்மைஅம் பசுங்காய்க்க குடுமி விளைந்த பாகல் ஆர்கைப் பறைக்கண் பீலித் . தோகைக் காவின் துளுநாடு" - அகம் : 15 : 2-5. "பொன் வளம் மிக்க, கொண்கானத்தின்கண் உள்ள, நன்னனுக்குஉரிய நல்ல நாட்டில் இருக்கும் அழகு பொருந்திப் ஏழில் மலை வளத்தைப் பெறுவதாயிலும், உன்னைவிட்டுய பொருள்வயின் பிரிபவர் யார்? - . . . . . . ." "பொன்படு கொண்கான நன்னன் நன்னாட்டு ஏழில் குன்றம் பெறினும், பொருள்வயின் யாரே பிரிகிற்பவரே?" . - - - - நற்றிணை :391 : 6-8. (மேலே கூறிய இரு பகுதிகளையும் இணைத்துத் திருவாளர். எஸ். கிருஷ்ணசாமி அய்யங்கார் அவர்கள், துளு