பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/453

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

446 தமிழர் வரலாறு நாடு அல்லது கொண்கானம், நன்னனுக்கு உரிய நாடாகும் : ஒரு போரில், நன்னன் தன் அரச யானையுைம் இழந்து தோல்வியைத் தழுவியதன் விளைவால், அவன் நாடு கோசர் எனும் புதியவரால், அழிவுண்டு போயிற்று என்ற முடிவினைக் கொண்டுள்ளார். (Beginnings of South Indian History, Page : 8485). இக் கூற்றின் பிற்பகுதிக்குச் சான்றாக, "நன்னனுக்கு உரிய காவல் மரமாம் நல்ல மாமரத்தை வெட்டி வீழ்த்தித் தம் நாட்டிற்குக் கொண்டு சென்ற, என்றும் வாய்மையே பேசும் கோசர் போலச் சிறிது, வன்கண்மை உடைய சூழ்ச்சியும் வேண்டும்." "நன்னன் நறுமா கொன்று நாட்டில் போக்கிய ஒன்று மொழிக் கோசர் போல வன்கண் சூழ்ச்சியும் வேண்டும்." - - குறுந்தொகை : 73 : 2-5. எனவரும் பகுதியைக் கொண்டுள்ளார். குறுந்தொகைப் பதிப்பாசிரியர் ஒருவர், நல்ல மணங்கமழும் மாமரம் எனும் பொருள் உடையதான நறுமா என்பதற்குப் பட்டத்து யானை எனப்பொருள் கூறியுள்ளார். நல்ல மணம் எனும் பொருள் உடையதான் "நறு" என்ற சொல் இடம் பெற்றிருப்பதையும் இறந்த ஒரு யானையின் உடலைத் தம் நாட்டிற்குக் கொண்டு சென்றிருப்பராயின் கோசர் அறிவிலாதவராவர் என்பதையும் மறந்து, திருவாளர் கிருஷ்ணசாமி அய்யங்கார் அவர்கள், அப்பொருளை ஏற்றுக் கொண்டுள்ளார். கோசர், துளு நாட்டில் இருந்தவாறே, கொங்கு நாட்டில், அடிக்கடிப் படையெடுத்துச் சென்று, கோசரின் புதிய ஊர் எனும் பொருள் உடையதான கோயம்புத்துர் நகரைக் கண்டனர். கோசரின் துளு நாட்டிற்கு வடக்கில், மெளரியர்களின் பெரும்பாலும், பாடலிபுத்திரத்து மெளரிய இனத்து ஒரு பிரிவின் வழி வந்த சாளுக்கிய இனத்து முதலாம்