பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/456

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேர அரசர்கள் - 449 திண்கதிர்த் திகிரி திரிதரக் குறைந்த உலக இடைகழி அறைவாய்" - ւյթւb : 175 : 5 - 8. சந்திரகுப்தன் அல்லது பிந்துசாரன் காலத்தில் மெளரியர் களின் இந்தியப் படையெடுப்பு என்ற கோட்பாடு, இந்நான்கு பாடற்பகுதிகளை அடிப்படையாகக் கொண் டுளது. இக்கோட்பாட்டிற்கு அரணாகத் திருவாளர் எஸ். கிருஷ்ணசாமி அய்யங்கார் அவர்கள், இப்பாடற் பகுதிகள் கி. பி. முதல் நூற்றாண்டில் கொண்டு வைக்கத் g5#charassrob Grail spy 3,055 [Beginnings of South Indian History. Р. 8] மாமூலனார், சோழப் பேரரசன் கரிகாலனின் சமகாலத்தவர் என்பதற்கான அகச்சான்றும் உளது என்று sa pistiprtừ [Beginnings of South indian History. Page : 87]. „glög அகச்சான்று எது என்பதை அவர் அறிவிக்கவில்லை. கரிகாலனின் பகைவனாகிய பெருஞ்சேரலாதன் வடக்கிருந்து உயிர் துறந்தபோது, அது கேட்ட அவன் அவைக்களப் புலவர்களும் வடக்கிருந்து உயிர் துறந்த நிகழ்ச்சியைக் குறிப்பிடுகிறார். (அகம் : 55 : 10 - 14), இது, மாமூலனார் கரிகாலனுக்குப் பிற்பட்ட காலத்தைச் சேர்ந்தவர் என்பதை நிலைநாட்டும் : எத்தனை ஆண்டு பிற்பட்டவர் என்பதைச்கூற இயலாது. உண்மையைக்கூறின், தம்முடைய பாக்கள் பலவற்றிலும், இந்நூல் 20, 21, 23, மற்றும் இந்த 25 ஆகிய அதிகாரங்களில் குறிப்பிடப்பட்ட எந்த அரசர்களின், சமகாலத்தவராகத் தம்மை மாமூலனார் குறிப்பிடவில்லை : மாறாகக் கி. பி. ஐந்தாம் நூற்றாண்டின் இறுதியில், சேர, சோழ, பாண்டியராகிய தமிழ் அரச இனம் மூன்றும் வீழ்ச்சி உற்ற பின்னர், ஆட்சிக்கு வந்துற்ற எண்ணற்ற குறுநிலத் தலைவர்களின் காலத்தவராகவே காட்டிக் கொண்டுள்ளார். ஆகவே, பழைய தொகை நூல்களில் தொகுக்கப்பெற்ற பாடல்களைப் பாடிய புலவர்கள் அடங்கிய கடைச்சங்ககாலப் புலவர்களில் கடைசியானவராவர்." திருவாளர் கிருஷ்ணசாமி அய்யங்கார் அவர்கள், மெளரியப் படையெடுப்பு அலையினை, மதுரை மற்றும்