பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/457

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

450 ក្រៅព្រៃ សព្វសញ្ច பொதிகை மலைவரை நீண்ட சென்றதாகக் கொண்டுள்ளார். அகம் 25 ல் வரும் "பொதியில்" என்ற சொல்லைப் பிழை படப்பொருள் கொண்டு விட்டதே. அவரின் அம்முடிவுக்குக் காரணமாம் "பொதியில்" என்ற சொல், கோசர் கூடியிருப்பதைச் சுட்டிக் காட்ட வந்திருக்கும் பாடற்பகுதி எதிலும், அது, பொதிகைமலை எனும் பொருள் தரும் வகையில் "பொதியில் இல்" என வந்திலது. அக்கோசர் காணப்படடும் இடமெல்லாம் சாகாவரம் பெற்ற அகஸ்தியரும் அவர் மாணவர்களும் இடங்கொண்டிருக்கும் மலையோடு இணைக்கக் கூடாத, முதிர்ந்து நன்கு தழைத்த ஆலமரத்து அடிகளே ஆகும். இப்பொருள் பற்றிய திறனாய்வில், கோசர்க்குச் சிறப்பான இடம் இருப்பதால், இத்திறனாய்வினை முடிப்பதற்கு முன்னர்ப் பழந்தமிழ் இலக்கியத்தில், கோசர் பற்றிக் குறிப்பிடப்படும் பலவற்றிலிருந்து இரண்டைமட்டும் ஈண்டு எடுத்துக்காட்டுகின்றேன். முதலாவதும் ஒர் உவமையே : அதன் பொருள் வருமாறு. "முரசு முழங்கவும், சங்கு ஒலிக்கவும், நனிமிகப் பழமை வாய்ந்த ஆலமரத்து அடியில் உள்ள மன்றத்தில், தங்கித் தோன்றிய நாலூர்க் கோசரின் நன்மொழி போல." - "பறைபடப்" பணிலம் ஆர்ப்ப, இறைகொள்பு தொன்முது ஆலத்துப் பொதியில் தோன்றிய நாலூர்க் கோசர் நன்மொழி போல" குறுந்தொகை : 15 : 1- 3. ஈண்டு எடுத்துக் காட்டிய அனைத்தும், ஒரே ஒரு நிகழ்ச்சியைக் குறிக்கவே - அதாவது, மோரியரின் தூசிப் படையாகக் கண்மூடிக் கண்திறப்பதற்குள் நடந்து விடும் நாடகமேடைக் காட்சிபோல் கோசர் வந்து தோன்றும் அவ்வொன்றைக் குறிப்பனவே. அடுத்து வரும் பகுதி பின் வருமாறு கூறுகிது, "மழை பெய்வது இடையற்றுப் போகாமையால் தப்பாத விளைவினையுடைய பழையன் என்பானுக்குரிய மோகூரிடத்து அரசவை பெருமை பெற்று விளங்க, நான்மொழிக் கோசர் என்பார் வீற்றிருந்தாற் போல"